இதுவரை இல்லாத அளவிற்கு ஷாருக்கான் வீட்டு முன் போலீஸ் குவிப்பு !

இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறப்படுவதற்கு பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் ஆதரவு தெரிவித்தார். சகிப்புத்தன்மையை வலியுறுத்தி தேவைப்பட்டால் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுப்பேன் என்று சில நாட்களுக்கு முன் ஷாருக்கான் கூறினார்.

ஷாருக்கான் இந்த கருத்திற்கு விசுவ இந்து பரிஷத் அமைப்பு இதற்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தது. ஷாருக்கானை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் மூத்த தலைவர்களில் ஒருவர் கூறினார். மேலும் பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யா நாத் என்பவரும் ஷாருக்கானுக்கு எதிரான பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டார்.

2fb18519-b05b-4fde-8141-6f3172aca0ea_S_secvpf
அவர் கூறுகையில், ‘‘ஷாருக்கான் தேச விரோதி, அவரது இதயம் பாகிஸ்தானில் உள்ளது” என்று தெரிவித்தார். ஆனால் ஷாருக்கானுக்கு சிவசேனா, காங்கிரஸ், பாலிவுட் நச்சதிரங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றனர்.

2010-ம் ஆண்டில், ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கூறியதால் சிவசேன கட்சியினர் ஷாருக்கான் வீட்டிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து 50 காவலர்கள் அடங்கிய குழு அவரது வீட்டிற்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்தது. இந்நிலையில் சகிப்புத்தன்மை பற்றிய ஷாருக்கான் கருத்தால் அவர் வீட்டிற்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மும்பையில் உள்ள ஷாருக்கான் வீட்டிற்கு முன் 75 போலீசார் குவிக்கப்பட்டு, 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுவருகின்றனர்.