ரஷ்ய விமானத்தில் வெடிகுண்டு : பிரிட்டன் பிரதமர் தகவல் !

david_cameron_0

 எகிப்து நாட்டின் சினாய் பெனின்சுலாவில் கடந்த சனிக்கிழமை மெட்ரோஜெட் 9268 என்ற விமானம் விழுந்து நொறுங்கியதில், அந்த விமானத்தில் பயணித்த 224 பேரும் பலியாகினர்.

இந்நிலையில், இந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதற்கு கணிசமான சாத்தியம் இருப்பதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். அந்த நகரில் தற்போது தடைப்பட்டிருக்கும் சுமார் 20 ஆயிரம் பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகளையும் பிரிட்டனுக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று பிரிட்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் இத்தனை வேகமாக இந்த முடிவுக்கு வந்தது தவறு என்று எகிப்து அரசு கருத்து தெரிவித்துள்ள நிலையில், எகிப்திய சுற்றுலா மையமான ஷரம் எல் ஷெய்க்குக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் பிரிட்டன் கூறியுள்ளது.

முன்னதாக, இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் தெரிவித்தது நினைவு கூரத்தக்கது.