அபு அலா –
அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நிலவுகின்ற குறைபாடுகளையும், ஆளணி பற்றாக் குறைகளையும் நான் நிவர்த்தி செய்வேன் எனவும் இக்காரியாலயத்துக்கு தேவைப்படுகின்றவற்றை எனக்கு தெரிவிக்காதவரை என்னால் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது எனவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.பாஸீலா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு அங்கு உரையாற்றும்போது தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் காணப்படும் குறைபாடுகளை உடனக்குடன் எனக்கு தெரியப்படுத்துங்கள். எனது கையடக்க தொலைபேசி 24 மணி நேரமும் மக்களுக்காகவும், எனது அமைச்சின் கீழ் காணப்படுகின்ற அனைத்து திணைக்கள அதிகாரிகளுக்காகவும் இயங்கிக்கொண்டிருக்கின்றது. என்ன தேவையாக இருந்தாலும் என்னுடன் தொடர்பு கொண்டு உரையாடலாம்.
நான் சுகாதார அமைச்சராக இருக்கின்றேன் என்னிடம் அடிக்கடி அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறமத்துக்கு ஆளாக்குவதா என்று யாரும் சிந்திக்க வேண்டாம் என்றார்.
கிழக்கு மாகாண சுகாதார முன்னாள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரின் முயற்சியினால் சுமார் 17.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உறுப்பினர் எ.எல்.தவம், சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண பணிப்பாளர், கல்முனை பிராந்திய பணிப்பாளர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.