தமிழீழ விடுதலைப்புலி சந்தேகத்துக்குரியவர்களின் வழக்குகளை விசாரிப்பதற்காக தனியான நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
இதேவேளை, மரண தண்டனையை ரத்து செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் யோசனையில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கைச்சாதிடப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை அரசாங்கம் இந்த முறை அந்த யோசனையில் கைச்சாத்திடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், இன்னும் இரண்டு வருடங்கள் வரை மரண தண்டனைனை அமுல்படுத்த முடியாத நிலை ஏற்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.