அஸ்ரப் ஏ சமத்
தர்கா டவுனில் உள்ள பழமை வாய்ந்த பாடசாலையான அல்-ஹூமைசரா பாடசாலையில் 1971 காலப்பகுதியில் புலமைப்பரிசில் வழங்கி அதிகார கொடை விடுதியில் தங்கி கல்வி கற்று பல்வேறு அரச தணியாா் துறைகள் தற்பொழுது சேவையாற்றி ஓய்வு பெற்றுள்ள 95 பழைய மாணவகள் அமைப்பின் இரண்டாவது வருடாந்தக் கூட்டம் தெஹிவளையில் இன்று (1ஆம் தகிதி நடைற்றது.
இந் நிகழ்வு இவ் அமைப்பின் தவைவா் டெலிக்கொம் பொறியியலாளா் பௌசுல் ஹக் மற்றும் செயலாளா் ஓய்வு பெற்ற அதிபா் எம்.எம். றில்வான் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இக் கல்லுாாியில் கல்வி கற்ற 75க்கும் மேற்பட்டவா்கள் நாடுபூராவும் வந்து கலந்து கொண்டனா்.
இந் நிகழ்வின் போது அல் ஹம்ரா பாடசாலையில் கற்று பல்கலைக்கழக செல்லும் மாணவி ஒருவருக்கு பல்கழைக்கழக கல்விக்காக புலமைப்பரிசில் திட்டம் ஒன்று வழங்கப்பட்டது. அத்துடன் கடந்த 3 ஆண்டுகளாக இவ் அமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்தி வரும் இவ் அமைப்பின் தலைவா் பௌசுல் ஹக்குக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
அத்துடன் ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியா் எழுதிய ” 2030 களில் சந்திர மட்டத்திலும் சகலரும் அகதிகள் என்ற விஞ்ஞான புனைக்கதை நுால் வெளியீட்டு வைக்கப்பட்டது.