சப்னி
அட்டாளைச்சேனை மண்ணுக்கு கொடுத்த வாக்குறுதியை தலைமை ஒருபோதும் மீறாது என்றும் அட்டாளைச்சேனைக்கான பாராளுமன்ற உறுப்பினர் பதவி அம்மண்ணுக்கு வழங்கப்படும். எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று(31) தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின், இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற ”தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு” எனும் தலைப்பிலான இளைஞர் மாநாட்டில், கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சாய்ந்தமருதில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் இது பற்றி உரையாற்றுகையில்,
அட்டாளைச்சேனை ஏ.எல்.எம். நஸீருக்கு வழங்கப்பட்ட மாகாண அமைச்சு காலம் முடிவடைந்தவுடன் அட்டாளைச்சேனை மண்ணின் 30 வருட கனவான பாராளுமன்ற உறுப்பினர் அந்தஸ்த்தை அந்த மண்ணுக்கு நான் வழங்குவேன். என நிகழ்வில் உரையாற்றுவதற்கு முன் இக் கருத்தினை கூறிவிட்டே அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்ற ஆரம்பித்தார்.
இந்நிகழ்வில், பிரதியமைச்சர்களான பைஷால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஸீர் அஹமட், மாகாண அமைச்சர் ஏ.எல்.எம் நஸீர், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஐ.எல்.எம் மாஹிர், கே.எம். அப்துல் றசாக் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது, மண்ணுக்கு பெருமை சேர்த்த சாதனையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர், நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.