மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, அநுராதபுரத்தில் நேற்று (29) நடைபெற்ற கூட்டமொன்றில் சுயாதீன தொலைக்காட்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது;
சுயாதீன தொலைக்காட்சிக்கு விளம்பரங்களை வழங்கிய முகவர் நிறுவனம் எது? அதனுடனான ஒப்பந்தம் என்ன? அவ்வாறான சிறிய விடயங்களுக்காக ராஜபக்ஸவை அழைப்பது அர்த்தமற்றது. தற்போது ராஜபக்ஸ எதனை செய்தார்? விளம்பரத்தில் நடித்தார்.
நீதிமன்றத்திற்கு நடிகரைக் கொண்டு வருவதில் பயனில்லை. சுயாதீன தொலைக்காட்சி மற்றும் முகவர் நிறுவனத்திடமே விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். அது யாருடைய நிறுவனம்? MEDIA FACTORY என்ற முகவர் நிறுவனம் யாருடையது? சுற்றிவளைக்க வேண்டியதில்லை. தந்தையின் விளம்பரத்திற்கு மகன் கப்பம் வாங்குகின்றார். கப்பம் பெறுவதையே முகவர் நிறுவனங்கள் முன்னெடுக்கின்றன.