‘இஸ்ரேலியக் கண்ணீர் புகைக் குண்டில் எட்டு மாதக் குழந்தை மரணம்’- பலஸ்தீன் நிர்வாகம் !

இஸ்ரேலியப் படைகளுக்கும், கல்லெறிதலில் ஈடுபட்ட பாலத்தீன இளைஞர்களுக்கும் இடையே நடந்த மோதலில், இஸ்ரேலியப் படையினர் வீசிய கண்ணீர் புகை குண்டால் எழுந்த வாயுவை சுவாசித்த எட்டு மாத ஆண் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

இஸ்ரேலியர்கள் வீசிய கண்ணீர் புகைக் குண்டால் எழுந்த வாயு, பெத்லஹேமுக்குத் தெற்கெ உள்ள ஒரு கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் பரவி, அங்கு இருந்த குழந்தை இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

2AFC469800000578-3180937-Burned_alive_A_relative_holds_up_a_photograph_of_18_month_old_Al-a-9_1438332569733

இஸ்ரேலிய ராணுவத்துக்காகப்பேசவல்ல அதிகாரி ஒருவர், இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலிய ராணுவம் விசாரித்துக்கொண்டிருப்பதாகக் கூறினார்.

 

ரமதான் தாவப்தெ என்ற இந்தக் குழந்தையின் மரணத்துடன், இந்த மாதம் நிலவிக்கொண்டிருக்கும் பரவலான அமைதியின்மையில் கொல்லப்பட்ட பலஸ்த்தீனர்களின் எண்ணிக்கை 60ஐத் தாண்டிவிட்டது.

இதே காலகட்டத்தில் பலஸ்தீனத் தாக்குதல்களில் குறைந்தது 9 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.