ஜவ்பர்கான்
மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரைமீதேறி போராட்டம் நடாத்திய ஏழு விளக்கமறியல் கைதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மேற்கொண்ட முயற்சியினால் சில மணித்தியாலங்களில் கைவிடப்பட்டதுடன் கைதிகள் கீழே இறங்கியனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்குமேலாக விளக்கமறியல் கைதிகளாக சிறைச்சாலையிலுள்ள பாரிய குறிறச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகளில் ஏழு பேர் இன்று மாலை 5.00 மணியளவில் சிறைச்சாலையின் பிரதான கட்டிடத்தின் மேல் ஏறி போராட்டத்தை ஆரம்பித்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்களுக்குரிய வசதிகள் வழங்கப்படவேண்டும் குறிப்பாக தமது குடும்பத்தினருடன் பேச நடமாடும் தாலைபேசி வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் இவ்விடத்திற்கு நீதிபதிகளான என்.எம்.அப்துல்லாஹ் மற்றும் ஏ.எம்.ஏ.றியாழ் ஆகியோர் ஸ்தலத்திற்கு வந்து எம்முடன் பேசவேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.எம.றியாழுடன் தொலைபேசியில் பேசியதையடுத்து பதில் நீதிபதி எதிர்வரும் திங்கட்கிழமை மாலை சிறைச்சாலைக்கு வருவதாக தெரிவிதத்தையடுத்து சிறைக்கைதிகள் கூரையிலிருந்து கீழே இறங்கினர்.
இப்போராட்டததையடுத்து சிறைச்சாலைக்கு முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.