பீகார் சட்டசபை தேர்தலில் நான்காம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார், ‘நீங்கள் ‘பிஹாரிக்கு’ (பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்) வாக்களிக்க விரும்புகிறீர்களா? அல்லது, ‘பஹாரிக்கு’ (வெளிநபர்) வாக்களிக்கப் போகிறீர்களா? என்று மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், பீகாரில் முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவின் சொந்த மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க.வின் உச்சகட்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நிதிஷ் குமாரின் கருத்துக்கு சரியான பதிலடி தந்துள்ளார்.
‘இந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள்தான் கடந்த 60 ஆண்டுகளாக பீகாரில் ஆட்சி செய்துள்ளன. ஆனால், இந்த மாநிலத்துக்கு என்ன செய்தோம்? என்று அவர்களால் சொல்ல இயலவில்லை.
நிதிஷ் குமார் என்னை வெளிநபர் (‘பிஹாரி’) என்கிறார். இந்தியாவின் ஒரு சக்திவாய்ந்த உறுப்பாக இருக்கும் பீகாரை சேர்ந்த மக்கள் என்னை பிரதமராக்க வாக்களித்துள்ளனர். இந்த நிலையில் நான் எப்படி வெளிநபராவேன்? நான் என்ன பாகிஸ்தான் பிரதமரா? வங்காளதேசத்தின் பிரதமரா? அல்லது, இலங்கையின் பிரதமரா?
டெல்லியில் வசிக்கும் சோனியா காந்தியையும் வெளிநபர் என்று நிதிஷ் குமார் அழைப்பாரா? சோனியா காந்தி பிஹாரியா? பஹாரியா? என்பதை நிதிஷ் முதலில் விளக்க வேண்டும். தங்களது சாதனைகளைப் பற்றி சரியான விளக்கம் அளிக்க முடியாதவர்கள் இதைப்போன்ற விளையாட்டுகளின் மூலம் மக்களை திசைதிருப்ப முயற்சித்து வருகின்றனர்’ என மோடி கூறியுள்ளா