பாரூக் சிஹான்
வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்களையும் மற்றும் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோருடனான விசேட சந்திப்பொன்று கடந்த திங்கள் அன்று வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சரின் மன்னார் உப அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தற்போது தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினரிடையே நிலவிவரும் 60:40 என்ற பிரச்சினை தொடர்பாகவும், நேர சூசிகள் அமைப்பது தொடர்பாகவும் கலந்தாலோசித்தார், இதன் அடிப்படையில் நாளை 29-10-2015 யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட ஒன்றுகூடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



