ஒரு தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதென்பது மனித நாகரீகங்களில் முன்னிலையான விடயமாக இருந்த போதிலும் எமது இஸ்லாம் மார்க்கம் போதித்த மேலான ஒரு விடயமுமாகும்
தேசிய காங்கிரசின் ஆரம்பநிலை போராளிகளாக சபீஸ் போன்றோர்கள் இருக்கும் போது பதவி ஆசையில் குறிவைத்து சேகு இஸ்ஸடீ னிடம் இருந்து விலகி தே காங்கிரசில் இணைந்து கொண்டார் தவம் .
அங்கும் பதவி இல்லாமல் போனதொரு நிலையில் ரிசாட் அணியோடு பேரம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் திடிரன முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து கொண்டார்
முஸ்லிம் காங்கிரசில் இணைந்த காலத்திலிருந்து அவர்தான் முஸ்லிம் காங்கிரசை உருவாக்கியது போல் நடந்து கொண்டதன் விளைவாக மு கா தொண்டர்களின் கோபத்துக்கு ஆளானார் .
அண்மையில் மு காங்கிரசின் ஆரம்ப காரண கர்த்தாவும் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் விம்பமாக பார்க்கப் படுகின்ற ஹசன் அலி மீது அவதூறாக கட்டுரை எழுதியதன் மூலம் அனைபேரினதும் அசிங்கமான வார்த்தைகளுக்கு ஆளானார் இப்போது மீண்டும் சுகாதார அமைச்சு கானல் நீரானதும் ரிசாட் அணியில் 30 இலட்சத்துக்கு விலை பேசப் பட்டுள்ளார் இதுதான் இவரின் மக்கள் உணர்வு .
மறுபுறம் எஸ் எம் சபீசை எடுத்துக் கொண்டால் கடந்த இரு தேர்தல்களிலும் வெற்றிலைச் சின்னத்தை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று தெரிந்தும் தலைமைத்துவத்திற்கு விசுவாசமாகவும் அக்கரைப்பற்று மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதற்காகவும் அயராது பாடுபட்டு மக்களின் நன்மதிப்பை அதிகமாக்கிக் கொண்டவர்.
தோல்வியிலும் துவண்டு விடாமல் பணம் பதவிகளுக்காக கட்சிமாறாமல் மக்களுக்காகவும் கட்சிக்காகவும் தோள் கொடுத்து இன்னமும் அதாஉல்லாவிற்கு பக்க பலமாக செயற்படும் சபீசை பார்த்து பலர் வியந்துள்ளனர் .
இப்படிப்பட்ட எஸ்.எம்.சபீசிடம் ஏ. எல். தவம் பாடம் எடுத்துக் கொள்ள வேண்டும் .