கடந்த சில காலம் தொட்டு ஊடகத்துறையானது பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கின்றது அனைத்து மக்களது தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு பக்க பலமாக இருக்கும் இந்த ஊடகங்கள் உலகத்தின் முக்கிய வழிகாட்டியாக உள்ளன நாட்டின் பொருளாதார மேம்பாடு தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் ஊடகங்களின் பங்கு அளப் பெரியது ஊடகங்களைப் பொறுத்தவரையில் அது சமூகத்தின் உரிமைக் குரலாகவே இருக்க வேண்டும் ஆகவேதான் ஊடகத்தை நாம் பொது மக்களின் சொத்தாகவே கருதுகின்றோம்.
இன்றைய நவீன உலகில் மனிதன் பல் வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டு செல்வதை எம்மால் காண முடிகிறது மருத்துவம்,விஞ்ஞானம்,தொழில் நூட்பம் அணு ஆயுதம் போன்ற வற்றில் மனிதன் தன்னையே மித மிஞ்சும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கின்றான் ஆனால் இந்த வளர்ச்சியானது மனிதனுக்கு பல அணு கூலங்களை தந்தாலும் சில பிரதி கூலங்களையும் தரத்தான் செய்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
எந்த துறையை உலகுக்கு அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும் முதலில் தகவல் தொழில் நுட்பத்துக்கு உடந்தையாக இருப்பது இந்த ஊடகங்களே ஆகவேதான் இன்று உலகத்தின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாததாகவே காணப்படுகின்றது ஆனால் சமூகத்தின் இரு கண்களாக இயங்க கூடிய ஊடகங்கள் சில பக்கச் சார்பாக பணத்துக்கு அடிமைப்பட்டு அதிகார வர்க்கத்தினருக்காக இயங்க கூடியதையும் எம்மால் கண் காணிக்க கூடியதாகவே இருக்கின்றது.
உலகத்தின் மேற் கத்தய யூத சியோனிசுக்கள் மதங்களுக்குள் பிளவுகளை உண்டு பண்ணுவதற்கும் தனக்கு எதிராக செயற் படுகின்ற நாடுகளுக்குள் ஆட்சி முறையை குழப்புவதற்கேல்லாம் இதுபோன்ற சக்தி வாய்ந்த ஊடகங்களையே நாடுகிறார்கள் என்பதும் மறைமுகமானே உண்மையாகும்.
ஊடகத்துறையை வழி நடத்துபவர்களை மக்கள் மிகக் கண்ணியமாகவே கருதுகிறார்கள் ஏனெனில் உலகத்தில் எந்த மூலையில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் பல் வேறு அர்ப்பணிப்புக்களுடன் அதனை உடனுக்குடன் மக்களுக்கு அறியத்தருவது இந்த ஊடக செய்தியாளர்களே ஆகவே ஊடகங்களை வழிநடத்தும் ஊடகவியலாளர்கள் நடுநிலையாக எந்த வீத எதிர்பார்ப்புமின்றி செயற் பட வேண்டும்.
மனிதன் கல்வியில் பல் சார் துறையில் எவ்வளவுதான் முன்னேறியிருந்தாலும் தனது தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொள்ளும் விடத்து ஊடகங்களின் உதவியை நாட வேண்டியுள்ளது ஏனெனில் ஊடகங்களில்தான் அதிகமான வெளிநாட்டு உள்நாட்டு தொழில் வாய்ப்புக்கான விளம்பரங்கள் அதிகம் அள்ளி வீசப்படுகின்றன.
ஊடகத்துறையை எடுத்துக் கொண்டால் நாம் அதன் தன்மைக் கேற்ப நான்கு வகையாக பிரிக்கலாம் அச்சு ஊடகம் அலை ஊடகம் காட்சி ஊடகம் மின்னனு ஊடகம் இதில் உள்ள அனைத்துவிதமான ஊடகங்களும் மனிதனுக்கு அன்றாட வாழ்வில் உபயோகமானவையாக இருந்தாலும் கூட மின்னனு ஊடகமே இன்றைய நவீன உலகில் அதிகமானவர்கள் எங்கிருந்தும் பயன்படுத்த கூடியவாரு இலகுவாக இருக்கின்றது.
இன்று இந்த ஊடகங்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறதென்றால்
18 ஆம் நூற்றாண்டில் கடற் படை யார் கைகளில் இருந்ததோ அவர்களுக்குத் தான் இந்த உலகம் சொந்தமாக இருந்தது 19 ஆம் நூற்றாண்டில் விமானப் படைகளை வைத்திருந்த நாடுகள் தான் உலகையே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தன ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் உலக ஊடகங்களை எவர் தனக்கு கட்டுபட்டதாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு உலக நாடுகள் எல்லாம் சொந்தமாகிவிடும் என்று கூறியுள்ளார் முன்னாள் மலேசியா பிரதமர் மகாதீர் அப்படியானால் உலகத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு முன்னேறிச் செல்கிறதோ அந்த அளவு ஊடகங்களின் பங்கும் காணப்படுகின்றது என்பதை இதிலிருந்து நாம் தெட்டத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இத்தகைய சக்தி வாய்ந்த ஊடகங்கள் இன்று ஒரு சிலரின் கையில் மட்டுமே உள்ளது ஊடகங்கள் என்பது ஆக்க சக்திக்கே பயன்படவேண்டுமே தவிர அழிக்கும் சக்தியாக பயன் படுத்தி விடக் கூடாது என்பதில் ஊடகங்கள் நடுநிலையுடன் கண்ணும் கருத்துமாக செயற் பட வேண்டும் இந்த ஊடகமானது சமூக அரசியல் பொருளாதாரத் தளங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியமையினாலயே நாம் உலகத்தின் வளர்ச்சியில் ஊடகங்களின் பயன்பாடு இன்றியமையாதது என்கின்றோம்.
ஊடகங்கள் எந்த அளவுக்கு சம நேர்மையுடன் செயற்படுகிறதோ அந்த அளவுக்கு பொது மக்களாகிய நாமும் அரசாங்கமும் அவர்களின் பணியை செய்வதற்கு அவர்களுடைய உரிமையை வழங்க வேண்டும் மாறாக வெவ்வேறு பிரச்சினைகளை அவர்களுக்கு எதிராக தூண்டி இடையூரு இழைப்போராக இருக்கக் கூடாது ஏனெனில் சில நாடுகளில் சம காலம் தொட்டு நடை பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தங்களில் பல ஊடகவியாளலர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்பது கவலைக்குறிய விடயமே.
எந்த நாட்டில் ஊடகத்துறையின் முழு சுதந்திர உரிமையும் கொடுத்து அந்த ஊடகம் பக்கச் சார்பின்றி இன நிற மத வேறு பாடுகளுக் அப்பால் நடு நிலையாக செயற் படுகிறதோ நிச்சயம் அந்த நாடு ஒற்றுமையின் உதாரண புரிசராகவே மாறும் என்பதில் எந்த வீத மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை