சாதனை படைத்துள்ள ஓட்டமாவடி ஹிஜ்றா மகா வித்தியாலையம் !

 அஹமட் இர்ஸாட்

 

 1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையான ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலையம் பிரதேசத்தின் மாணவர்களின் ஆரம்ப கல்வியினை முக்கியத்துவப்படுத்தியும் அதிகரித்து வரும் மக்கள் சனத்தொகையின் தேவைக்கேற்பவுமே ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். அதன் முதலாவது அதிபராக எம்.சி.எச்.முஹம்மட் இரண்டு ஆசிரியர்களுடன் பொறுப்பெடுத்த இப்பாடசாலையானது இன்று கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற முன்னணி பாடசாலைளுடன் போட்டியிட்டு ஐந்தாமாண்டு புலமைபரிசில் பரீட்சையில் 10 மாணவர்களை சித்தியடையச் செய்துள்ளமையானது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் விடயம் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது.

01_Fotor

 

பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளுடன் ஒப்பிடும் பொழுது ஒர் ஆரம்ப பாடசாலைக்கான அடிப்படை பெளைதீக வசதிகளின்றி காணப்படுக்கின்ற இப்பாடசாலையானது அதன் அதிபர் செய்னம்பு ஹமீட்டின் அர்ப்பணிப்புடனான நிருவாகத்தின் காரணமாகவும், அவரின் மேற்பார்வையின் கீழ் செயற்பட்டு வருக்கின்ற ஆசிரியர்களின் கற்பித்தல் திறமையின் அடிப்படையிலுமே இவ்வருடம் கல்குடா பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் கூட மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு எது வித பெளதீத அடிப்படை வசதிகள், ஆளனி பற்றாக்குறை, அரம்ப மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், முழு நிறைவற்ற வகுப்பறைகள் என பல குறைகளுடன் காணப்பட்டும் பத்து மாணவர்களை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்ச்சையில் சித்தி அடையவைத்துள்ளமையானது பாடசாலையினை சூழவுள்ள  மக்கள் மட்டுமல்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழுக்கின்ற முழு மக்களையுமே சிந்திக்க வைத்துள்ள விடயமாக இருக்கின்றது. முதலாவது அதிபர் எம்.சி.எச்.முஹம்மட், அதனை தொடர்ந்து எம்.ஏ.எம்.ஜுனைட்., அதற்கப்பால் 2008ம் ஆண்டில் இருந்து இன்று வரை பிரதேசத்தின் முதலாவது பெண் அதிபராக செயற்பட்டு வருக்கின்ற செனம்பு ஹமீடின் தலையின் கீழ் வீறு நடை போடுகின்றது என்பது முக்கிய விடயமாகும்.

02_Fotor

முழுமையாக மீன் பிடியினையே தமது வாழ்வாதாரமாக எடுத்து வாழ்ந்து வருக்கின்ற மக்களை கொண்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் அமைந்துள்ள இப்பாடசாலையானது பொதுவாக சமூக அமைப்புக்கள், தனவந்தர்கள், அரசியல்வாதிகள், பலராலும் புறக்கணிக்கப்பட்டு வந்தாலும் அதன் அதிபர் அதிலும் தங்களது தொழிலே தெய்வம் நினைத்து தங்களது ஆசிரியர் தொழிலினை இறைவனுக்கு பயந்தவர்களாக ஆற்றிவரும் ஆசிரியர்களின் கடமையின் உச்ச நிலைமை காரணமாக இன்று இப்பாடசாலையானது பத்து மாணவர்களை சித்தியடையச் செய்து முன்னணி பாடசாலைகளையும் பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

முற்று முழுதாக இப்பாடாசலையினை அண்டி வாழுக்கின்ற மக்களின் உதவியானது இப்பாடசாலைக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டினையும் கண்மூடித்தனாமக் சுமர்த்திவிடமுடியாது. அவர்களால் எந்தளவு செய்ய முடியுமோ அதனை அவர்கள் செய்திருக்கின்றார்கள் என்றே கூற முடியும். இருந்தும் ஏனைய பாடசாலைகளின் பெற்றார் பாதுகாவலர் சங்கம், பழைய மாணவர் சங்கம், பொது அமைப்புக்கள், அரசியல்வாதிகள், சமய கலாச்சார அமைப்புக்கள், விழையாட்டுக் கழகங்கள் அவர்களுடைய பாடசாலைகளூக்கு அவர்கள் செய்கின்ற உதவிகள், மாற்றும் ஊக்கங்களைப் போன்று ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலையத்திற்கும் கிடைக்கின்ற உதவிகளை பார்க்கின்ற பொழுது அது கானல் நீராகவே இருக்கின்றது. இதனை கல்குடா சமூகமும், ஓட்டமாவடி பிரதேச மக்களும், சமூக அமைப்புக்களும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்பது அப்பாடாசையின் அதிபரினதும் ஆசியர்களினதும் வேண்டுகோளாக இருக்கின்றது.

 

இப்பாடசாலையில் இம்முறை சித்தி அடைடைதுள்ள பத்துமாணவர்களில் 169 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தினை பெற்ற மாணவனான இல்லியாஸ் அயாசுல் அசாத் எனும் மாணவனின் தந்தை தனது இரண்டு வயதில் இனம் தெரியாதோரினால் கடத்தப்பட்டு இன்று வரைக்கும் வீடு திரும்பாத நிலையில் எதுவித உதவியும் இன்றி தனது தாயின் உதவியுடன் மட்டுமே இன்று பிரதேசத்தின் முன்னணி பாடசாலைகள் சிந்திக்குமளவிற்கு தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளான் என்பது எதார்த்தமாக இருந்தாலும் அப்பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் இங்கு முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது. பத்து மாணவ மாணவிகள் புலமைப்பரிசில் பரீட்சையி 155 வெட்டுப்புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்திருந்தாலும் 32 மாணவ மாணவிகள் 78 புள்ளிகளுக்கும் மேல் பெற்றிருபதானது பாடசாலை சாதாரண தரத்திற்கு உகந்த பாடசாலை என்பதை நிரூபித்திருக்கின்றது என்பததனை பறைசாற்றும் விடயமாக இருக்கின்றது என்பதில் மாறுக்கருத்தில்லை.

 

எது எவ்வாறாக இருந்தாலும் இலைமறை காயாக இருக்கின்ற ஆரம்ப மாணவ மாணவிகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்படுக்கின்ற ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் இவ்வாறு தேசிய பாடசாலைகள், முன்னணி பாடசலையில் வியக்கும் அளவிற்கு ஒரே தடவையிலே பத்து மாணவர்களை சித்தியடைய வைத்ததும் அல்லாமல் எதுவித அடிப்படை சுற்றுச் சூழல், பெளதீக வசதிகள் அற்ற நிலையில் 32 மாணவர்கள் 78ற்கும் அதிமான புள்ளிகளை அடைய வைத்துள்ளமையினை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இன்னும் பல படிகளை ஓட்டமாவடி ஹிஜ்றா மகா வித்தியாலையம் அடைய வேண்டும் என்பதனை தங்களது இலட்சியமாக கருதி ஓவ்வொருத்தரும் தங்களால் முடிந்த பங்கினை இப்பாடசாலைக்கு செய்ய வேண்டும் என்பது பாடசலையின் அதிபரினதும் ஆசிரியர்களினதும் பணிவான வேண்டுகோளாக இருக்கின்ற அதே சமயம் பாடசாலையினை சுற்றியுள்ள சகலரினதும் கடைமை என்பதோடு பர்ளு கிபாயா எனக் கூறுவதில் கூட பிழையில்லை..

 

சிதியடைந்துள்ள மாணவ மானவிகளின் விபரம் பின்வருமாறு..

இல்லியாஸ் அய்யாசுல் அசாத்- 169, லெப்பைதமி ஹனான்169, அப்துல் ரஹ்மான் முஹம்மட் றிஸ்ஹாந்-168, முஹமட் பைசல் முஹம்மட் சஹ்மி- 164, நளீம் பாத்திமா ஹனீக்கா-161, நெளதீன் முஹம்மட் அர்ஹம்-160, அப்துல் ஜவாத் முஹம்மட் அஸ்மத்- 159, முஹம்மட் அஸ்மின் முஹம்மட் சனா- 157, லத்தீஃப் முஹம்மட் அரபாத்- 157, மீராமுஹைதீன் பாத்திமா ஹிமா -155,