இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகள் இன்று கானல் நீராகி வருகின்றன. மைத்திரி – ரணில் கும்பல்சார்ந்த தனிப்பட்ட நலன்களும் அதிகாரங்களும் மட்டுமே வெளிப்பட்டு நிற்கின்றன. தொடர்ந்தும் ஆட்சிமுறையை பாதுகாத்துள்ளதுடன், இவர்கள் கடந்த தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி மக்களை ஏமாற்றி முட்டாள்களாக்கி வருகின்றனர். இதற்கிடையில் மு. கா. கொப்பிழந்த குரங்குபோல தாவித் தாவி ஒரு தெளிவில்லாத போக்கை தொடர்சியாக கையாண்டு வருகின்றது. நக்கிப் பிழைக்கும் இந்த நாகரிகமற்ற போக்கால் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களின் நிலைதான் கேள்விக்குறியாக்கப்படும். மு. கா. தலைவர் வன் மேன் ஆமி போன்று எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகளால் ஒரு சமூகமே மூழ்கிப் போகும் அபாயம் தோன்றியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கரைப்பற்றுக்கு அதிகாரம் வழங்கப்படும், அத்துடன் அட்டாளைச் சேனைக்கு ஒரு தேசியப்பட்டியல் கொடுக்கப்படும் என பகிரங்கமாக கூறினார் மு. கா. தலைவர், அக்கரைப்பற்றுக்கான அதிகாரம் சுகாதார அமைச்சுதான் என்ற ஒரு மாயயை மக்கள் மத்தியில் சகோ. தவம் அவர்களும், மற்றும் சகோ. நஸீர் அட்டாளைக்கான எம் பீ என்பதுமாக நடந்து கொண்டனர். இதனை உறுதிப்படுத்தம் நிகழ்வாக தேர்தல் முடிவு வெளியானதும் பால்சோறு ஆக்கிக் கொண்டாடிய நஸீர், தவம் அவர்களின் கூட்டிணைவு அமைந்தது. மக்களும் இதணையே நம்பியும் இருந்தனர்.
எமது மக்களின் ஏமாற்றத்திலும், பலவீனத்திலும் குளிர்காயும் இந்த கயவர்களை மக்கள் இனி இனங் கண்டாகவேண்டும். இவர்கள் சார்ந்த வர்க்க விருப்பத்துக்கான இருப்பினை ஸ்த்திரப் படுத்திக் கொள்ளும் ஒரு வகையான கைங்கரியம் தான் மு. கா தலைவருடைய தேர்தல் காலமுதலீடு. இது ஒரு மிகப் பெரும் அசிங்கமான அரசியல். மக்களிடத்தில் ஒரு விடயத்தை வெளிப்படுத்தி விட்டு இரகசிய ஒரு நிகழ்ச்சி நிரல்களை முன்னேடுக்கும் இவர் உண்மையில் பசுத்தோல் போத்திய புலி., அத்துடன் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக பிரித்தே வைத்திருப்பதன் ஊடாக தான் சார்ந்த அதிகார வர்க்கத்தை தக்கவைத்துக் கொள்கின்றார் மு. கா. தலைவர். இதற்கெல்லாம் முதல் காரணம் மு.கா. தலைவரின் பதவி மோகம்தான்.
அல்குர்ஆன் ,ஹதீஸ் என்று அரசியலை ஆரம்பித்த மு.கா, அதன் தலைவர், மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் ஏதாவது முன்மாதிரிகளைக் கண்டிருக்கின்றோமா? கிடையவே கிடையாது. பதவிகளுக்காக எதையும் செய்யத் துனிந்தவர்கள்தான் இவர்கள். மக்களிடையே கருத்துவேறுபாடுகளை உருவாக்கி பிரதேச வாதங்களை ஏற்படுத்தி எமது பிரதேசங்களில் அமைதியற்ற தன்மையினை உருவாக்கித் தந்தவர்கள் இவர்கள்தான். அன்மையில் ஒரு நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான காங்கிரஸ் என தனக்கு நம்பிக்கையில்லையென தெரிவித்த சிரேஷ்ட எழுத்தாளர் லத்தீப் பாரூக் அதை ஒரு முனாபிக் காங்கிரஸ் என அழைக்கவே தான் விரும்புவதாகதெரிவித்தார்.
கிழக்கு மக்களின் உரிமைகலுக்காக தொடங்கப் பட்ட அரசியல் இயக்கம்தான் மு.கா. அது இன்று ஒரு குறிப்பிட்ட வர்த்தக சமூதாயத்திடம் சரனாகதியாகி விட்டது. காலத்துக்கு காலம் ஒருசில அரசியல் பூச்சாண்டிகளைக் காட்டி எமது சமூகத்தை மிகவும் நுட்பமான முறையில் பிரித்தாழ்வதன் மூலம் மு.கா. தலைவரின் நிலை தொடர்ச்சியாக பாதுகாக்கப் படுகின்றது. இது தான் அரசியல் சாணக்கியம் என்று எமது மக்களின் சிந்தனை முறையில் திணிக்கப்படுகின்றது. சில சமயங்களில் ஒரு விதமான மனித அறிவியலுக்கு அப்பாட்பட்ட இனவாதக்கருத்துக்களை புகுத்துவதன் மூலம் எமது மக்களின் அறிவை மலடாக்கி நவீன அடிமைத்தனத்தை மு. கா அதன் மூலனமாக்கிக் கொள்கின்றது. எமது சமூகம் தன்னைச் சுற்றியுள்ள இந்த மாய வட்டத்தை விட்டு, சுயமாக வெளியில் வரமுடியாத வாறு ஒரு சில நிகழ்ச்சி நிரல்களை திட்டமிட்டுநிரல்படுத்தி வெற்றிகரகாக நடாத்திச் செல்கின்றது.
நாடே பற்றி எரியும் போது பதவிகளை துறந்து முஸ்லிம் சமூகத்தின் துயர் தீர்க்க மறந்தவர்களை அரசியல் சாணக்கியர்கள் என்றும், இலங்கை ஒட்டு மொத்த முஸ்லிங்களின் பாதுகாவலர்கள் என்றும் மெய் சிலிர்த்துக் கொள்ளும் நம் முட்டாள் தனத்தை நம் சமூகத்தின் தலைவர்களாக கட்டமைக்கப்பட்டுள்ள மொத்த வியாபாரிகள் மூலதனமாக்கிக் கொள்கின்றனர் என்பதை நாம் எப்போது உணர்ந்து கொள்கின்றோமோஅப்போதுதான் நம் சமூகம் விடிவு பெறும்.
இந்த நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து விடுவித்தது போன்று, பதவிசார் சொந்த இலாபங்களின் அடிப்படையிலே நம் சமூகத்தின் தலைவர்களாக கட்டமைக்கப்பட்டுள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்து முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டியதும் நமது எல்லோரினதும் கடமையே.