அபாயா..!

அபாயா
+++++++

அபாயா என்பது
அவயம் மறைக்கணும்
அபயம் அளிக்கணும்
அபாயம் தடுக்கணும்

ஆனால்
சிலரின் செயலால்
பரிதாபமானது
பர்தா ஆடை.

கிறுக்குத் தனமாய்
சிறுக்கிகள் சிலபேர்
இறுக்க உடுக்கும்
சொக்ஸ் அபாயா
அதை
பொறுக்கிகள் பலரும்
உறுக்கிப் பார்ப்பதால்
செ(ர்)க்ஸ் அபாயாவாய்
சீரழிகின்றது.

அபாயா தெரியா
அந்தக் காலத்தில்
மூத்தம்மா மார்
முழுசா மறைத்து
உடுத்ததைப் பார்த்து
உம்மத் திருந்தனும்.

உடம்பின் வடிவம்
ஊருக்கே தெரிய
இடும்பாய் உடுக்கும்
இந்த அபாயா
படும்பாடு பார்க்க
பாவமாய் இருக்கு.

தலையை மறைக்க
விலையான கல்லுடன்
பல பல டிசைனில்
பள பள மின்னும்
சோளை வாங்கி
மேலால் சுற்றுவார்.
பாதித் தலை
பகுதியாய் மறைய
மீதித் தலை
மெல்லத் தெரிய
வீதியில் திரிவது
வெட்கக் கேடு.

மார்க்கம் சொன்ன
மறைத்தல் என்பது
யார்க்கும் விளங்காது
இயன்றவரை மறைத்தல்.

முகமும்
முன் கையும்
முழுதாய்ப் பாதமும்
மூடுவது தொடர்பில்
முப்திகளிடம் கேட்கலாம்.

மற்ற உறுப்புக்கள்
உற்று நோக்கினும்
சற்றும் விளங்காது
சரியாய் உடுப்பதே
மரியாதையான
மார்க்க உடையாகும்.

*தலைப்பும் தகவலும் தந்த சகோதரியின் மகளுக்கு நன்றி*
(நிஷவ்ஸ் -24/10/2015)