மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, இது உடலுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
அத்தகைய சிறப்பு மிக்க வாழைப்பழத்தில் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை மற்றும் சளி, காய்ச்சலை குணப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக நிபுணர்கள் வாழைப்பழத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பனானா லெக்டின் அல்லது ‘பான் லெக்’ எனப்படும் புரோட்டீன்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இவற்றை மிகவும் கவனமாக பகுப்பாய்வு செய்து பிரிக்கும் போது எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, சளிக்காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்க கூடிய மருந்து தயாரித்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. எய்ட்ஸ் நோயாளிகளின் உடலில் இதை செலுத்திய போது பக்கவிளைவுகள் ஏற்பட்டன.
தற்போது இவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு எலிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. எரிச்சலோ, விரும்பத்தகாத நிகழ்வுகளோ நடைபெறவில்லை. எனவே இதை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும் என கருதப்படுகிறது.