அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என துணை ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களில், பெர்னி ஸாண்டர்ஸூம், ஹிலாரி கிளின்டன் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
ஹிலாரி கிளின்டன், பல மாதங்களுக்கு முன்பே ஆதரவு திரட்டத் தொடங்கிவிட்டார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ள பெர்னி ஸாண்டர்ஸ் என்பவரும் கிட்டத்தட்ட அதுபோன்ற தொகையைத் திரட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. பல்வேறு மாகாணங்களில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு, கட்சியினரையும் பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதனிடையே, துணை ஜனாதிபதி ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதிப்பார் என்று கடந்த சில மாதங்களாகவே ஊகச் செய்திகள் வலம் வந்த வண்ணமிருந்தன. ஆனால் இந்த வதந்திக்கு ஜோ பிடன் முற்றுபுள்ளி வைத்துள்ளார். ஜோ பைடன் அறிவிப்பால் ஹிலாரி கிளின்டனுக்கான வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.