மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் சட்டப் பணிப்பாளர் மற்றும் புவி றஹ்மதுழ்ழாஹ் சந்திப்பு !

மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் சட்டப் பணிப்பாளர் ஜேம்ஸ் றொஸ், ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுழ்ழாஹ்வைச் சந்தித்தார்.

 
அமெரிக்காவிலுள்ள மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (HUMAN RIGHTS WATCH) வின்  Legal & Policy Director இன்று (21.10.2015) இரவு காத்தான்குடிக்கு விஜயம் செய்து, ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

HRW & Puvi_Fotor
அவருடன் இலங்கை மற்றும் சர்வதேச மனித உரிமைகளைப் பேணும் கண்காணிப்பு ஆர்வலரான திரு. ருக்கி பெர்ணான்டோவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் அஜித் பிரசன்ன, ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரின் வீட்டிலிருந்து கஞ்சா பொதியொன்றைக் கைப்பற்றியதாகக் குற்றஞ்சாட்டி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் அவர் நிரபராதி என இம்மாதம் 06ம் திகதி நீதிமன்றம் தீர்;ப்பு வழங்கியதையடுத்தே இவர்கள் காத்தான்குடிக்கு வருகை தந்து புவி. றஹ்மதுழ்ழாஹ்வைச் சந்தித்தனர்.

 
இவ்வழக்கின் முறைப்பாட்டாளரான முன்னாள் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னாவுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புவி. றஹ்மதுழ்ழாஹ்வினால் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் உரிய நிவாரணங்களைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், கோப்பிடப்பட வேண்டிய ஆவணங்கள் தொடர்பாக இதன்போது சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
‘வார உரைகல்’ பத்திரிகை மற்றும் இணையதளம் ஆகிய ஊடகத்தளங்களின் தோற்றம், நோக்கம், கடந்த காலங்களில் சந்தித்த இடர்பாடுகள், எதிர்ப்புக்கள், தாக்குதல்கள் மற்றும் சாதித்த சாதனைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது திரு. ஜேம்ஸ் றொஸ் கேட்டறிந்து கொண்டார்.