பெண்களும் பேஸ்புக்கும்…!

Facebook-is-blue-facts-about-facebook

அன்புள்ள சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று நம் சகோதரிகள் நிறைய பேர் பேஸ்புக்குக்கு அடிமையாகிவிட்டோம்.
ஒபீஸ் டைம் இலும் பேஸ்புக்.
குக்கிங் டைம் இலும் பேஸ்புக்.
பெட்ரூமிலும் பேஸ்புக்.
பாத்ரூமிலும் பேஸ்புக்.
பட்டிதொட்டி எல்லாம் பேஸ்புக் பாவனையாளர்கள்.

பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் சகோதரிகளே முக்கியமாக ஒன்றை விளங்க வேண்டும். உங்களை பற்றிய முழு விபரங்களையும் Profile இல் போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

பெண்களின் பேஸ்புக்குக்கு ஆண்கள் Friend Request அனுப்புவது சாதாரன ஒரு விடயம்தான். அதற்காக யாரோ எவரோ என்று பயந்து போக வேண்டாம். அவருடைய profile ஐ பார்த்து நல்ல விடயங்களை போட்டிருப்பாரேயானால் accept பண்ணுங்கள். இல்லாவிட்டால் Delete பண்ணிவிடுங்கள்.

நல்லவராக இருந்து படம் காட்டுகின்றவர்களும் இருக்கின்றார்கள். சிலர் தேவை இல்லாத, மோசமான, அருவருப்பான விடயங்களை Tag பண்ணுவார்கள் அல்லது உங்கள் ஆக்கங்களுக்கு அவ்வாறு Comment பண்ணுவார்கள். இது தவிர இன்னும் சிலர் Massage மூலம் அதாவது Chatting மூலம் தேவையில்லாத இச்சையை தூண்டுகின்ற வீடியோக்களையும் போட்டோக்களையும் செய்திகளையும் அனுப்புகின்றவர்கள் இருக்கின்றார்கள். “இவ்வாறு யாருக்கும் அனுப்பாதீர்கள், இது நல்லவர்களுடைய பண்பு இல்லை” என்று அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அவர்களை Unfriend பண்ணி விடுங்கள், அல்லது Block பண்ணி விடுங்கள்.

சிலர் இருக்கின்றார்கள், சந்தேகம் பிடித்தவர்கள். என்ன சொன்னாலும் நம்பவே மாட்டார்கள். தோண்டி தோண்டி உங்களிடம் கேள்வி கேட்டுகொண்டே இருப்பார்கள். “நீங்கள் பெண்ணா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. உண்மையிலே பெண்ணாக இருந்தால் எனக்கு ஒரு போட்டோ அனுப்புங்க, வொயிஸ் மெசேஜ் அனுப்புங்க, போன் நம்பர் அனுப்புங்க, முகவரி அனுப்புங்க, WhatsApp, IMO, Viber அனுப்புங்க, அத அனுப்புங்க, இத அனுப்புங்க” என்று நோண்டிக்கொண்டே இருப்பார்கள். அவசரப்பட்டு அவர்கள் கேட்பதை கொடுத்து உங்கள் வாழ்கையை நாசமாக்கி விடாதீர்கள். “போட்டோவை பார்த்துவிட்டு அழித்து விடுவேன்” என்று சத்தியம் எல்லாம் பண்ணுவார்கள். இதெயெல்லாம் நம்பிவிடாதீர்கள். நீங்கள் அனுப்பும் போட்டோக்களை வைத்து உங்கள் வாழ்கையில் வேறு விதமாக விளையாடி விடுவார்கள். அதனால் எக்காரணம் கொண்டும் போட்டோக்கள் அனுப்ப வேண்டாம்.

நாம் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
போட்டோ கேட்கின்றவர்கள்…
போன் நம்பர் கேட்கின்றவர்கள்…
நம்மிடம் ஏதோ ஒன்றை எதிர் பார்க்கின்றார்கள் என்று அர்த்தம். அதற்கு இடமளிக்கக்கூடாது. 
நமது போட்டோக்களை பார்த்து விட்டு அழித்து விடுவதைவிட அதை வைத்து ரசித்துக்கொண்டிருந்தால் அது நமக்கு பெரும்பாவம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அதனால் யார் போட்டோ கேட்டாலும், என்னிடம் போட்டோ இல்லை, அது ஹறாம் என்று சொல்லுங்கள். “நான் பெண் என்று நிரூபிப்பது என் கணவரிடம் மட்டும்தான் உங்களிடம் இல்லை” என்று சொல்லுங்கள்.

“முகம் பார்த்து முகவரி பார்த்து வருவதல்ல உண்மை நட்பு.
உள்ளங்களால் உருவாவதே உண்மையான நட்பு.
உங்களுக்கு பிடித்தால் நண்பனாக இருங்கள், இல்லாவிட்டால் Unfriend பண்ணி விடுங்கள்” என்று உங்களிடம் போட்டோ கேட்பவர்களிடம் சொல்லுங்கள். அடிக்கடி கேட்டு தொல்லைபடுத்தினால் அவர்களுடைய massage ஐ Block பண்ணி விடுங்கள்.

உங்கள் முகப்புத்தகத்தில் எப்போதும் நல்ல விடயங்களையே பதிவிடுங்கள், share பண்ணுங்கள். நல்ல விடயங்களுக்கு மட்டுமே like, comment பண்ணுங்கள். இன்னும் உங்கள் பிரதேசங்களிலே நடக்கின்ற சமூக சீர்கேடுகளையும், அதனை தீர்ப்பதற்கான உங்கள் ஆலோசனைகளை அல்லது கருத்துக்களையும் பதிவிடுங்கள்.

உங்களுக்கு, உங்கள் மேல் நம்பிக்கை இருந்தால் எவ்வளவு நண்பர்களையும் இணைத்து கொள்ளலாம், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள், உள்நாட்டவர்கள் வெளிநாட்டவர்கள் என்று அவர்களுடைய Profile களை பார்த்து நீங்கள் விரும்புகின்றவர்களை நண்பர்களாக இணைத்துக் கொள்ளமுடியும்.
நீங்கள் எளிதில் ஏமாற கூடியவர்கள், யாரவது நம்மை ஏமாற்றி விடுவார்கள் என்று பயந்தால், தெரியாத நண்பர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம். அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

இன்னும் ஒரு முக்கியமான விடயம், நீங்கள் திருமணம் முடித்தவராக இருந்தால் கண்டிப்பாக உங்கள் கணவரின் அனுமதியுடன் பேஸ்புக் பாவியுங்கள். திருமணம் முடிக்காதவராக இருந்தால் நீங்கள் பேஸ்புக் பாவிப்பதை உங்கள் பெற்றோர், சகோதரர்கள் அறிந்திருப்பது நல்லது.

இந்த பேஸ்புக் மூலம் தகுந்த, நல்ல ஆலோசனைகளை தரக்கூடிய, பொருத்தமான நண்பர்களை உருவாக்கிக்கொள்ள முடியும். உங்களுக்கு பொருத்தமான, உங்களை நேசிக்கக்கூடிய வாழ்க்கை துணைவரைக்கூட தேடிக்கொள்ள முடியும். அது உங்கள் திறமையை பொறுத்து… அதற்காக யாரையும் லவ் பண்ணுவதாக நடித்து ஏமாற்றவோ, அவர்களை பைத்தியமாக்கவோ செய்யாதீர்கள்.
அதே நேரம் உங்கள் வாழ்கையை இதன் மூலம் அழித்து கொள்ளவும் முடியும்… எனவே மிக அவதானமாக நடந்து கொள்ளும்கள்.

உங்கள் அழகை காட்டியோ,
உடம்பை காட்டியோ,
அழகழகாக உடுத்துக் காட்டியோ,
நண்பர்களை உங்கள் பக்கம் கவரச் செய்யாதீர்கள்.
முடியுமானவரை உங்கள் கருத்துக்களாலும் ஆக்கங்களாலும் மக்கள் மனதில் இடம் பிடியுங்கள்.
உங்களை லவ் பண்ணும் நண்பர்களை விட உங்கள் ஆக்கங்களை லவ் பண்ணும் நண்பர்களை உருவாக்குங்கள்.

ஏனெனில்
அறிவை காதலிக்கும் நண்பர்கள்
என்றும் அழியா நண்பர்களே!!!

உங்கள் சகோதரி ஷாமிலா