கனடாவில் ஆளுங் கட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பி லிபரல் கட்சியை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் !

சட்டத்தரணி எம்.ஐ. உவைசுர் ரஹ்மான்

 
 பல வருடங்கலாக ஆட்சி செய்த கனெடிய கொன்செர்வேடி  கட்சியின் மக்கள் நிராகரித்து லிபரல் கட்சிக்கு இம்முறை வாக்களித்துள்ளார்கள். இதனடிப்படையில் கனடாவினுடைய புதிய பிரதமராக 42 வயது நிரம்பிய Justin Trudeau  வர வாய்ப்பு அதிகம். சிரிய நாட்டுச் சிறுவன் அயீலன்ட் குர்தியின் குடும்பம் கனடாவுக்கு அகதி அந்தஸ்து கோரி அங்கு செல்ல எத்தனித்த வேளையில் கதவை மூடி அயீலன்ட் குர்தியின் குருதியைக் குடித்த கொன்செர்வேடி கட்சியினையும், அதன் பிரதமரான Stephen Harper யினையும் மக்கள் நிராகரித்து தக்க தருணத்தில் நல்ல பாடம் புகட்டியுள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் அமர்கின்றவர்கள் அமர்வதற்கு உதவிய அடிமட்ட மக்களை மறக்கின்ற போது அல்லது மறுதலிக்கின்ற போது வருகின்ற நிலை இலங்கையில் மட்டுமல்ல கனடாவிலும்தான் என்பது இம்முறை தேர்தலில் கண்கூடு.
இம்முறை தேர்தலில் வழமைக்கு மாறாக 06 ஈழத்தமிழர்கள் போட்டியிட்டனர்.

justin trudeau
   Justin Trudeau

இவர்களுள் ஒரு சிலரேயேனும் பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரே இலக்கில் கனெடிய ஈழத் தமிழர்களிடம் ஒருமித்த கருத்து இல்லாமையும், குரோத மனப்பான்னையுமே தேர்தலில் ஈழத்தமிழர்களின் பின்னடைவாகக் கருத முடியும்.
நடந்து முடிந்த கனெடிய தேர்தலில் வரலாற்று வெற்றிப் பதிவினை செய்திருக்கிறது லிபரல் கட்சி. இவ்வெற்றியானது கொன்செர்வேடி   கட்சியின் ஆட்சியில் ஸ்திரமற்ற நிலையில் அக்கட்சிமீது மக்களுக்கிருந்த சலிப்புத் தன்மையை லிபரல் கட்சியின் அபார வெற்றிக்கு அதி முக்கிய காரணம். இதேவேளை, 43 வயது நிரம்பிய இலங்கையை பிறப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட கனெடிய பிரஜையான புயசல யுயெனெயளயபெயசநந 2015 ஒக்டோபர் 19ல் இடம்பெற்ற 42வது கனடிய நாடாளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Stephen Harper
   Stephen Harper

இவர் இலங்கையின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரியின் புதல்வராவார். இலங்கையில் வுருடுகு சார்பில் கிளிநொச்சி, யாழ் தேர்தல் தொகுதிகளில் MP யாகவும் திகழ்ந்த சட்டத்தரணி ஆனந்த சங்கரியின் இரண்டாவது புதல்வர். 1983ம் ஆண்டு தனது தாயுடன் கனடாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற இவர் அங்கு ஒட்டாவாவில் சட்டத்தரணியாகி தனது தொழிலை டொரொன்டோவில் செய்தவர். தந்தையின் அரசியல் கொள்கையிலிருந்து மாறுபட்ட இயங்குதளத்தில் தனையன் இயங்கி ராஜதந்திர ரீதியிலும் மிகவும் மதிநுட்பத்துடனும் பணிபுரிந்ததனால் கடல்கடந்த நாடொன்றில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பல மாநாடுகளில் பங்கேற்ற பெருமை இவரை சாருகின்றது. மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட தமிழினம் சார்பாகவும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாகவும் சர்வதேசரீதியில் போதிய சான்றுகளை சாட்சிப்படுத்தியவர்.

Gery aanantha sangary
Gery aanantha sangary

பன்நெடுங்காலமாக லிபரல் கட்சியில் இணைந்து அதன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இவர் தனது தந்தையைப் போல் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவரன்று ஒரு சாராரும், ஆதரவானவர் என்று இன்னுமொரு சாராரும் தேர்தல் காலங்களில் வாதப்பிரதிவாதங்களை முன்வைத்திருந்தனர். இருப்பினும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து கனெடிய பாராளுமன்ற அங்கத்தவராகியுள்ளார். இவருக்கு இம்முறை கிடைக்கப்பெற்ற வாக்குகள் 28471. இங்கு கரி ஆனந்த சங்கரிக்கும் சாந்தி குமாரிக்கும் இடையில் பலமான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவருக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 5164 ஆகும். கரி பெற்ற வெற்றி அபார வெற்றியாகும். இந்தத் தொகுதி லிபரல் கட்சியின் போட்டியாகவே கருதப்படுகின்றது.
இதே வேளை இலங்கையின் முதல் கனெடிய நாட்டின் உறுப்பினராக பதவிநிலை வகித்த ராதிகா சிற்சபைஈசன் என்பவர் இம்முறை தோற்கடிக்கப்பட்டதும் கோடிட்டுக் காட்டப்படவேண்டிய ஒன்று. ராதிகா சிற்சபைஈசன் போட்டியிட்ட தொகுதியில் NனுP கட்சி சார்பில் 8647 வாக்குகளைப் பெற்றார். தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தொகுதியில் 2ம் நிலையைக்கூட அடையமுடியாமல் மூன்றாம் நிலைக்கு பின்தள்ளப்பட்டமை அவரது அரசியல் செயற்பாடுகளை கேள்விக் குறியாக்கியுள்ளது. எனினும் அவருடைய எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் அவர் கொண்டிருந்த கவனக்குறைவே தோல்விக்குக் காரணம்.
ஒட்டுமொத்தத்தில் NனுP கட்சியைச் சேர்ந்த 03 தமிழ் வேட்பாளர்களும் கொன்செர்வேடி மற்றும் பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் இருவரும் தோல்வியுற்ற நிலையில் லிபரல் கட்சியின் சார்பில் கரி சங்கரி மட்டுமே வெற்றிபெற்றுள்ளார். இம்முறை ஆகக் குறைந்தது மூன்று ஈழத்தமிழ் உறுப்பினர்களாவது அனுப்ப வேண்டும் என்று கண்டிருந்த கனவு கலைந்துவிட்டது. ஒற்றுமைப்பட்டிருந்தால் இன்னும் ஒளிமயமான இரண்டு ஆசனங்களயாவது அங்கு பெற்றிருக்க முடியும்.