உயிர் வாழ உண்ணும் உணவே உயிரினைப் பறிக்கும் நிலை !

420995-dadri

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அத்தியவசியமான ஒன்றாகும்.எந்த உயிரினத்தினாலும் உணவின்றி உயிர் வாழ முடியாது.அனைத்து உயிரினங்களும் உணவு உண்ணுகின்ற போதும்,மனிதன் மாத்திரமே அவ் உணவு விடயத்தில் தங்களுக்குள் அடித்துக் கொள்கிறான்.உயிர் வாழ உண்ணும் உணவே உத்தரப் பிரதேசத்தில் ஒரு மனித உயிரினைப் பறித்துள்ளது.உடலின் பாகத்தினை ஊனமாக்கியுள்ளது.உடம்பினை அம்மணமாக்கியுள்ளது.

உணவு விடயத்தில் ஏனைய உயிரினங்கள் தங்களுக்குள் முரண்படாத போதும்,ஏன் மனிதன் மாத்திரம் முரண்படுகிறான்? ஏனைய உயிரினங்களினை விட மனிதனுக்குள்ள விசேடம் தான் என்ன? எனும் வினாக்களினை எழுப்பி விடைகளினை சிந்திக்கும் போது,ஏனைய உயிரினங்களினை விட மனிதனுக்கு மதம்,பகுத்தறிவு ஆகிய இரண்டுமே வித்தியாசமாக காணப்படுகின்றன.

மனிதன் பகுத்தறிவினைப் பயன்படுத்தி விஞ்ஞானத்தினை விளைவாக்கியுள்ளான்.இந்த விஞ்ஞானம் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளினையே தடை செய்துள்ளது.விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளினை உண்பது மடமையாகும்.இஸ்லாத்திற்கு முரண்படாத விஞ்ஞானத்தினால் நிரூபிக்கப்பட்டுள்ள விடயங்களினை முஸ்லிம்களும் ஏற்று நடக்க வேண்டும்.இதனையே இஸ்லாமும் முஸ்லிம்களுக்கு கற்றுத் கொடுத்துள்ளது.விஞ்ஞானத்தினால் நிரூபிக்கப்பட்ட விடயங்களுடன் இஸ்லாம் எந்த விதத்திலும் முரண்படாமல் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மனிதனும் இறைச்சி உண்ணும் விடயத்தில் மாத்திரமே தங்களுக்குள் முரண்பட்டுக் கொள்கிறான்.விஞ்ஞான ரீதியாக எருமை மாட்டிறைச்சி மனித உடலுக்கு பொருந்தாது என்ற காரணத்தினை முன் வைத்து அதனை இலங்கை அரசு தடை செய்துள்ளது.இத் தடை மனித நல நோக்கம் கொண்டது.ஆனால்,இன்று இறைச்சிக் கடைகளில் பசு மாட்டிறைச்சி போன்று எருமை மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதனை கண்ணூடாக அவதானிக்க முடிகிறது.இவ் இறைச்சியினை விற்பனை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.ஏனைய மக்கள் வாழும் பிரதேசங்களினை விட முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலேயே இவ் நிகழ்வு அதிகம் அரங்கேற்றப்படுகிறது.

அரசினால் தடை செய்யப்பட்ட உணவுகளின் விற்பனையின் போது எழுகின்ற பிரச்சனைகள் பொலிஸ்,நீதி மன்றம் எனச் செல்லும்.இலங்கையினைப் பொறுத்த மட்டில் சிங்கள மக்களில் அதிகமானவர்கள் மாட்டிறைச்சியினை உண்பதில்லை.முஸ்லிம்களினையும் உண்ணக் கூடாது என கோசம் எழுப்பியும் வருகின்றனர்.இவ்வாறான நிலையில் அரங்கேற்றப்படும் இவ் விடயங்கள் சிங்கள மக்களின் அதீத கண்டனத்திற்கு உட்படும்.இவ் விடயத்தின் போது எழுகின்ற பிரச்சனைகள் நேரடியாக பொலிசாரிடம் செல்லுவதால் பிரச்சனைகள் சட்ட ரீதியாக கையாளப்படுகின்றன.இதன் காரணமாக பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதில்லை.

எருமை மாட்டிறைச்சி மனித உடலுக்கு ஒவ்வாத காரணத்தினால் தானா இலங்கை அரசு தடை செய்துள்ளது? இலங்கையில் இடம்பெறும் மிருக வதைகளினைத் தடுக்க வேண்டும் எனத் தலைப்பிட்டு பேரின வாதிகள் மாடு,ஆடு அறுப்பதினைத் தடுக்கும் நோக்கில் காய் நகர்த்திய காலப்பகுதியிலேயே இச் சட்டக் கயிறுகள் இறுக்கமானது.இந்தியா உலகின் இறைச்சி ஏற்றுமதியில் முன் நிலை வகிக்கும் நாடுகளின் ஒன்றாகும். 2009ம் ஆண்டு உலகின் இறைச்சி ஏற்றுமதியில் 8 சதவீதத்தினைப் பிடித்திருந்த இந்தியா திடீர் என முன்னேற்றம் அடைந்தது.தற்போது உலக இறைச்சி ஏற்றுமதியில் முதன்மை இடத்தினை அடைவதற்கு பிரேசிலுடன் போட்டி போடும் நிலைக்கு வந்துள்ளது.இதற்கு எருமைகளின் பெருக்கத்தில் ஏற்பட்ட வளர்ச்சியே பிரதான காரணமாக குறிப்பிடப்படுகிறது.இவ்வாறு இந்தியாவின் ஏற்றுமதி இறைச்சியில் பாரிய தாக்கம் செலுத்தும் எருமை மாட்டிறைச்சி தடை செய்யப்படும் அளவு விஞ்ஞான தீங்குகளினை கொண்ட உணவாக இருக்குமா? எப்போதும் ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருக்குமல்லவா? ஒரு பக்கத்தினைக் காட்டி இது தான் நாணயத்தின் பக்கம் எனக் குறிப்பிட்டும் ஏமாற்ற முடியும் அல்லவா?

இரண்டாவது விடயம் மத ரீதியான கொள்கை முரண்பாடுகள் எனலாம்.இந்து,பெளத்த மதத்தினர் மாட்டிறைச்சி உண்பதினை பாவமாக கருதுகின்றனர்.இந்துக்கள் மாட்டிறைச்சியினை உண்ணாமல் தவிர்க்க முன் வைக்கும் காரணமும் பெளத்தர்கள் மாட்டிறைச்சியினை உண்ணாமல் தவிர்க்க முன் வைக்கும் காரணமும் வேறுபடுகின்றன.இந்துக்கள் பசுமாட்டினை புனிதமாக கருதுகின்றனர்.இதனால் அவர்கள் பசு மாட்டினை உண்பதிலிருந்தும் தவிர்ந்து கொள்கிறார்கள்.இந்தியாவினைப் பற்றி சிலேட்டர் என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.அதில் “ஆரம்ப இந்தியாவில் பசு மாடு எனும் ஒரு இனம் காணப்படவில்லை.இவை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டன.இவற்றினைப் பாதுகாக்கும் நோக்கில் இவற்றினைக் கொல்லுவது மத ரீதியாக மகா பாவம் என அந் நேரத்தில் வரையறுக்கப்பட்டது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஒரு மத ரீதியான விடயமாக உடண்பாடு அடிப்படையில் அனுகுவோம்.ஒரு குறித்த சமூகம் புனிதமாக கருதும் ஒரு விடயத்தினை  ஏனைய சமூகங்கள் ஏற்காது போனாலும் அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.முஸ்லிம்கள் பசுமாட்டினை அறுத்து சுவைத்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை.எனினும்,உழ்கிய்யா,அகீகா போன்ற இஸ்லாமிய கடமைகளினை நிறைவேற்றுவதிலேயே மாடு அறுப்பதன் அவசியம் உணரப்படுகிறது.இலங்கையில் எருமை மாடு அறுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.இருப்பினும்,இவ் விடயத்தில் முஸ்லிம்கள் மாட்டிற்கு பகரமாக ஆட்டினையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இதன் போது ஆட்டிற்கான கேள்வி பல மடங்காகும்.இது முஸ்லிம்கள் உழ்கிய்யா,அகீகா போன்ற இஸ்லாமியக் கடமைகளினை  நிறைவேற்றுவதனை சவாலுக்குட்படுத்தும்.மிகப் பெரிய சவால்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் இவ் விடயத்தினை மேலுள்ள விதத்தில் அணுக வேண்டுமாக இருந்தால்,அதற்கு ஏற்ப இந்துக்களும் இவ் விடயத்தில் அதீத கரிசனை கொள்ள வேண்டும்.

முதலில் பசுவினை இந்துக்கள் மதிக்கின்றார்களா? என்பதை ஆராய்வோம்.ஒரு புனிதமிக்க ஒன்றிலிருந்து வெளிப்படும் ஒன்றும் புனித மாகவே இருக்கும்.பசு மாட்டில் இருந்து வெளிப்படுகின்ற சாணம்,சிறு நீர் என்பவற்றினை இந்துக்கள் தங்களது வீட்டில்,தலையில் தெளித்தாலும் யாரும் வீட்டு அலுமாரியில் வைத்து புனிதப் பொருட்களாக பாதுகாப்பதில்லை.ஏன்? தமிழர்கள் வாழும் சில பகுதிகளில் கூட சாணி,சிறு நீர் என்பன காலுக்குள் மிதி படும்.தலையில் வைத்து அதனைக் கொண்டாடாது போனாலும் தரையில் மிதி படாது அதன் புனிதத்தினை பதுகாக்கலாமே?

இந்துக்கள் பசுவினை கடவுள்களின் தாய்,குலமாதா என வர்ணிக்கின்றார்கள்.மேலும்,சில இந்துக்கள் பசுவின் ஒவ்வொரு பாகத்திலும் கடவுள் குடி கொண்டுள்ளார் எனவும் நம்புகின்றனர்.இப்படிப்பட்ட நம்பிக்கையுடைய பசுவினை எந்தளவு கண்ணியப்படுத்த வேண்டும்? ஆனால் அவர்கள் தங்களது வீட்டின் ஒதுக்குப் புறத்திலேயே கட்டி வைப்பார்கள்.இப்படி  கண்ணியமிக்கதாய் நம்பப்படும் ஒன்றை,ஏன் தனது வீட்டின் நடுவில் கட்டி வைத்து அழகு பார்க்க முடியாதுள்ளது? இந்துக்களில் பெரும்பாலானோர் அவர்களின் தாய்க்கு சிறந்த முறையில் தானே கண்ணியம் வழங்குகிறார்கள்! கடவுகளின் தாய்,குலமாதா என வர்ணிக்கப்படும் பசுவினை,ஏன் அதன் வர்ணனைக்கு ஏற்ற உரிய இடத்தில் வைத்து மதிக்கத் தவறுகிறார்கள்? 

இறைச்சி உண்பதை பாவமாக கருதும் இந்துக்கள் பால் அருந்துவதனை பாவமாக கருதுவதில்லை.பால் என்பது பசு விரும்பி வழங்கும் ஒன்றல்ல.மனிதன் தனது உணவுத் தேவைக்காக பசுவிடம் இருந்து அனுபவித்துக் கொள்ளும் பலன்களில் ஒன்றாகும்.பாலினை ஒருவர் அருந்த முடியுமாக இருந்தால்,அதே உணவு நோக்கத்திற்காக அதன் இறைச்சியை உண்பதில் என்ன தவறு இருக்கின்றது? எனவே,மேற்படி விடயங்களினை வைத்து நன்கு ஆராயும் போது இந்துக்கள் அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற விதத்தில் பசுவினை மதிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.இந்துக்கள் பசுக்களினை எவ்வாறு மதிக்கின்றார்களோ,அதை வைத்தே ஏனைய மதத்தவர்களின் உள்ளங்களில் அதற்குரிய கண்ணியம் வரையறுக்கப்படும்.ஒரு கடவுளுக்குரிய பூரண மரியாதையினை இந்துக்கள் பசுவிற்கு வழங்குவார்களாக இருந்தால் இந்துக்களுடன் இணைந்து வாழ்கின்ற முஸ்லிம்கள் அவர்களின் மனம் புண்படாத வண்ணம் அதனை உண்பதை விட்டும் தவிர்ந்து நடப்பது சிறப்பானதாக இருக்கும்.

இந்துக்கள் பசுவினை மாத்திரம் கண்ணியமிக்கதாக மதிப்பதில்லை.அவர்களின் கடவுள்களின் வாகனங்களாக பல விலங்குகள் இந்துக்களினால் மதிப்பளிக்கப்படுகின்றன.எலி,காளை,புலி,மயில்,ஆந்தை,கருடன்,யானை,முதலை,குதிரை,கிளி,கீரி,சிங்கம்,காகம் என அதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.சில இந்துக்கள் இவ் விலங்குகள் கடவுள்களின் தன்மையினை பிரதிபலிப்பதாகவும் நம்புகின்றனர்.மேலும்,அவர்கள் கண்ணியம் வழங்கும் பட்டியல் குரங்கு,பாம்பு என்று நீண்டு கொண்டே செல்கிறது.

இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள குறவர்கள் பாம்பினையும்,குரங்கினையும் வித்தை காட்டச் செய்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.இது இந்துக்களின் தெய்வங்களினை ஏளனப்படுத்தும் ஒரு செயலாகும்.ஏன் இதனை இந்துக்கள் ஒரு பெரிய விடயமாக கருதுவதில்லை? இலங்கை வாழ்கின்ற சிங்கள மக்கள் குரங்கினைக் கொன்று புசிப்பவர்களாக உள்ளனர்.ஒரு ஆமிக் காறன் குரங்கினைக் கண்டால் அதனைக் கொன்று புசிக்க எத்தனை தோட்டாக்களினையும் பயன்படுத்துவான் எனக் கூறுவார்கள்.ஏன் குரங்கினைக் கொல்லுவதற்கு எதிராக இந்துக்கள் கோசம் எழுப்புவதில்லை? முஸ்லிம்கள்  ஒரு விடயத்தினைச் செய்தால் அதனை எதிர்ப்பதற்கும்,ஏனைய மதத்தவர்கள் ஒரு விடயத்தினைச் செய்யும் போது அதனை எதிர்ப்பதற்குமிடையில் ஏன் இத்தனை ஏற்ற இறக்கம்? இந்துக்கள் தங்களது கடவுள்களாக கருதுபவற்றினை உரிய இடத்தில் வைத்துப் பார்க்காமையும்,முஸ்லிம்கள் பசு விடயத்தில் கரிசனை காட்டாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிடலாம்.

பாம்பு தமிழர்கள் வணங்கும் விலங்குகளில் ஒன்றாகும்.இதனை நபி (ஸல்) அவர்கள் கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்கள்.பாம்பினைக் கண்டதும் இந்துக்கள் கையெடுத்து கும்பிடும் அதே வேளை முஸ்லிம்கள் கம்பெடுத்து கொல்ல விளைவார்கள்.இந்துக்களின் சில மத விடயங்கள் முஸ்லிம்களின் மத விடயத்துடன் இடை வெட்டுகின்றன.நபியவர்களின் உத்தரவிட்டுள்ளதை பின் பற்றத் தவறி பாம்பு போன்ற உயிரினங்களினால் முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தால்,அங்கு அக் குறித்த முஸ்லிமே இஸ்லாமிய அடிப்படையில் பிழை செய்தவராக கணிப்பிடப்படுவார்.அல்லது பாம்பு முஸ்லிம்களினைத் தீண்டாது என்ற வாக்குருதியினை தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும்.எனவே.அனைத்து விடயங்களிலும் முஸ்லிம்கள் இந்துக்களுடன் ஒத்திசைந்து நடக்க முடியாத நிலையும் உள்ளது.இவ்வாறு முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் ஒத்திசைந்து செல்ல முடியாத தமிழ் மக்கள் பின் பற்றும் கலாச்சாரமும் இப் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதனை சவாலுக்குட்படுத்துகிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஒரு இந்து சகோதரரின் வீட்டில் வளர்க்கப்பட்ட பசு  மாடு காணாமல் போய் விட்டது.இப் பசு அப் பிரதேசத்தில் வசித்த அஹ்லாக் எனும் முஸ்லிம் சகோதரர் வீட்டில் இறைச்சியாக குளிர் சாதனப்பெட்டியில் உள்ளதாக கதை பரப்பப்படுகிறது.இவ் வதந்தியினைத் தொடர்ந்து அப் பிரதேச இந்து மக்கள் கோயிலில் ஒன்றிணைகிறார்கள்.பின்னர் அஹ்லாக்கின் வீட்டினை நோக்கி படையெடுத்து அவரினைத்  தாக்கிக் கொல்கிறார்கள்.அவரது மகன் கண்ணினை இழந்துள்ளான்.அவரது மகளின் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அம்மணமாக்கப்பட்டுள்ளது.இறுதியில் அஹ்லாக்கின் வீட்டில் இருந்தது மாட்டிறைச்சியல்ல என்பதும் உறுதி செய்யப்படுகிறது.ஒருவர் சாதாரணமாக இறைச்சியை உண்பதற்கும்,இன்னுமொருவர் புனிதமாக கருதி வளர்த்த ஒன்றினை அறுத்து உண்பதற்கும் இடையில் மிகப் பெரிய வேறு பாடு உள்ளது.ஒருவர் புனிதமாக கருதி வளர்த்த ஒன்றினை அறுத்து உண்ணும் போது அது எல்லை மீறிய உணர்ச்சிப் பிரவாகத்திற்கு வழி வகுக்கும்.

இவ் விடயம் ஒரு கோயிலில் திட்டமிடப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.இது அக் கோயிலின் புனிதத்திற்குத் தான் களங்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.எந்த ஒரு மதமும் வன்முறைக்கு ஆதரவளிப்பதில்லை.ஒரு பெண்ணின் மானம் என்று வந்து விட்டால் ஒரு படி மேல் அனைவராலும் மதிப்பளிக்கப்படுகிறது.மதச் சாயம் பூசிக் கொண்டு இவ்வாறானவர்கள் செய்யும் காரியங்கள் அவர்களின் மதத்தினைத் தான் களங்கப்படுத்துகிறது.இத் தாக்குதலில் ஒரு முஸ்லிம் மரணித்திருக்கலாம்.அவர் இஸ்லாமிய அடிப்படையில் ஷஹீத் என்ற உயரிய அந்தஸ்தை அடைந்து கொள்வார்.ஆனால்,இதன் பிற்பாடு யாராவது இவர்களின் மதத்தின் பக்கம் தலை வைத்தாவது தூங்குவார்களா?

அண்மைக் காலமாக முஸ்லிம் பெண்களின் மானத்தில் RSS அமைப்பு அதிகம் கை வைத்து வருவதனை அவதானிக்க முடிகிறது.பெண்னினத்திற்காக குரல் கொடுப்பதாக கூப்பாடு போடும் பெண் அமைப்புக்கள்,முஸ்லிம் பெண்களிற்கு அநீதி இழைக்கப்படும் போது தட்டிக் கேட்கத் தயங்குவதேன்? எங்கே அந்த மலாலா?

இங்கு நடைபெற்றுள்ள விடயங்களினை நன்கு அவதானிக்கும் போது இப் பிரதேசம் முஸ்லிம்களும் இந்துக்களும் கலந்து வாழும் ஒரு பிரதேசம் என்பதை அறிந்து கொள்ளலாம்.இப் பிரதேசத்தில் உள்ள இந்துக்களில் ஒருவராவது குறித்த முஸ்லிம் சகோதரரினை தொடர்பு கொண்டு விசாரித்திருந்தால் கூட இவ் அனர்த்தம் இடம்பெற்றிருக்காது.இவ் விடயம் இப் பிரதேசத்தில் முஸ்லிம்,இந்து மக்களிடையே மத நல்லிணக்கம் சிறிதேனும் இல்லை என்பதை நன்றாகவே சுட்டிக் காட்டுகிறது.இப்படியான பிரதேசங்களில் மத நல்லிணக்கத்தினை ஏற்படுவதற்கான முறையான நடவடிக்கைகளினை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்திய அரசு மேற்கொள்ளுமா? தற்போது இந்தியப் பிரதமராக உள்ள மோடி இந்துத்துவ அடிப்படை வாத சிந்தனை கொண்ட மக்களினால் தெரிவாகியவர் மாத்திரமல்லாது இவரும் இவ்வாறான சிந்தனைகளில் நீராடிய ஒருவர்.தனது நாட்டில் இவ்வாறான மிலேச்சத் தனமான ஒரு விடயம் நடந்துள்ள போதும் அதனை நியாயப்படுத்தியோ அல்லது எதிர்த்தோ நேரடியாக எக் கருத்தினையும் தெரிவிக்கவில்லை.இதனை அறிந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூட தனது கண்டனத்தினை வெளியிட்டிருந்தார்.இது பற்றி மறை முகமாக கருத்துத் தெரிவித்த இந்தியப் பிரதமர் மோடி “நாட்டில் இருந்து வறுமையினை ஒழிப்பதா? அல்லது முஸ்லிம்களினை ஒழிப்பதா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என இந்துக்களினை நோக்கி கருத்து வெளியிட்டுள்ளார்.

இக் கருத்திற்கு இன்னுமொரு வடிவம் கொடுத்துப் பார்த்தால் இக் கருத்தின் பார தூரத்தினை அறிந்து கொள்ளலாம்.இதன் இன்னுமொரு வடிவம் ”இந்துக்களே நாம் எமது நாட்டில் இருந்து முதலில் ஒழிக்க வேண்டியது முஸ்லிம்களினை அல்ல வறுமையினை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.வறுமையினை ஒழித்த மறு கணம் எமது வேலை முஸ்லிம்களினை ஒழிப்பதே” என்பதாகும்.இக் கருத்து ஒரு நாட்டின் தலைவர் தெரிவிக்கும் கருத்தல்ல.ஒரு நாட்டின் தலைவர் அந் நாட்டு மக்கள் பிழை செய்கின்ற போது அதனைத் துணித்து எதிர்த்து செயல்பட வேண்டும்.அவ்வாறில்லதவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவின் அழிவினை நினைவூட்டுவது பொருத்தமானதாக அமையும்.

பௌத்தர்கள் இறைச்சியினை உண்ணாமால் தவிர்க்க மிருக வதையினையே பிரதான காரணமாக குறிப்பிடுகின்றனர்.மாடு,ஆடு அறுப்பது மிருக வதை என்றால் பௌத்தர்கள் எந்த உணவினை உண்ணப் போகிறார்கள்? அவர்கள் உண்ணுகின்ற கோழி,மீன்,தாவரத்திற்கு உயிர் இல்லை என்ற வாதத்தினை முன் வைக்கிறார்களா?

இஸ்லாம் பரிபூரணமான ஒரு மார்க்கம் ஆகும்.மக்களுக்குத் தேவையான அனைத்து விடயங்களுக்கும் அதில் தெளிவு இருக்கும்.உயிரினங்கள் ஏன் படைக்கப்பட்டுள்ளது என்பதை ஒருவர் தெளிவாக அறியும் போது இவ்வாறான வினாக்கள் ஒரு போதும் எழாது.அல்லாஹ் இவ் உலகத்திலுள்ள  அனைத்தினையும் மனிதனுக்காகவே படைத்துள்ளதாக சூறா 2  வசனம் 29 இல் குறிப்பிடுகிறான்.மேலும்,சூறா 6 வசனம் 142 இல்  கால் நடைகளில் சிலவற்றினை உணவுக்காகவும்,சுமை சுமப்பதற்காகவும் படைத்துள்ளதாக குறிப்பிடுகிறான்.எனவே,இஸ்லாமிய அடிப்படையில் இஸ்லாத்தில் உண்ண அனுமதிக்கப்பட்ட ஒரு உயிரினத்தினை அறுத்து புசிப்பதில் தவறில்லை.

குர்ஆன் கூறுவது சரி தானா? என்பதை நாம் சில விடயங்களினை வைத்தும் அறிந்து கொள்ளலாம்.உணவு உண்ணுவதன் அடிப்படையில் விலங்குகள் விலங்குண்ணி,தாவர உண்ணி,அனைத்தம் உண்ணி என மூன்று வகைப்படுகிறது.இதில் விலங்குண்ணி எனும் இனம் இறைச்சியினை மாத்திரம் புசித்தே தங்களது உணவுத் தேவையினை நிறைவு செய்கின்றன.அவ் இனம் விலங்கினைக் .கொன்று புசிக்காவிட்டால் உயிர் வாழ முடியாது.இதனை மத சிந்தனைகளுக்கு அப்பாற் பட்டு சிந்தித்தால் உணவுத் தேவையினை நிறைவு செய்து கொள்ள ஒரு உயிரினத்தினை கொன்று புசிப்பதில் தவறில்லை என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.குர்ஆன் கூறும் கருத்திற்கு நடை முறை வாழ்விலும் சான்று உள்ளது.

இன்று மனிதன் பல இயந்திரங்களினைக் கண்டு பிடித்துள்ளான்.அந்த இயந்திரங்களில் இருந்து அவன் இயலுமானவரை அதன் பலா பலன்களினை அடைந்து கொள்வான்.இதன் போது அவ் இயந்திரங்கள் சுக்கு நூறாக்கப்படும்.மனிதன் இயந்திரங்களினை உருவாக்கியதன் நோக்கத்தினை தெளிவாக அறிந்து வைத்துள்ளதனால் இதனை எந்த மனிதனும் பாவமாக கருதுவதில்லை.இதனை ஒரு சிறு உயிரினம் அவதானிக்கின்றது.அது நினைக்கின்றது “இந்த இயந்திரத்தினை பார்..! எம்மைப் போன்று அதுவும் இயங்குகிறது.மனிதன் அவனுடைய தேவைக்காக அதனை என்ன பாடு படுத்துகிறான்.இந்த மனிதனுக்கு மனச் சாட்சி இல்லையா?” எனக் கூறுகிறது.இச் சிறு பிராணியின் சிந்தனை அற்ற கூற்றினை யாராவது ஏற்பார்களா? இதனைப் போன்றே உணவுக்காக படைக்கப்பட்ட ஒரு உயிரினத்தினை அறுத்து சாப்பிடும் போது,அதனை மிருக வதை எனச் சித்தரிப்பதாகும்.

ஒரு உயிரிணத்தினை அறுப்பது மிருக வதை அல்ல.அதற்காக அதனை சித்தரவதை செய்து கொன்று புசிப்பதை ஏற்க முடியாது.இஸ்லாம் ஒரு உயிரினத்தினை அறுப்பதற்கு கூட சிறந்த வழி காட்டல்களினை வழங்கியுள்ளது.இஸ்லாத்தின் பிரகாரம் அறுக்கும் போது ஒரு உயிரினத்தின் உயிர் அதனை உடலினை விட்டும் மிகவும் நூதமான முறையில் பிரியும்.ஆனால்,இன்று சில வேற்று மதத்தினைச் சேர்ந்தவர்கள் கோரமான விதத்தில் உயிரினங்களினை கொன்று புசிக்கின்றார்கள்.இதனைப் பார்க்கும் ஒருவருக்கு இச் செயல் மிருக வதை போன்றே காட்சியளிக்கும்.

ஒரு விலங்கினை உரிய விதத்தில் பராமரிக்காமை,சுமை தூக்கிச் செல்லும் விலங்கிற்கு அதீத சுமைகளினை ஏற்றுவது,சிறந்த விதத்தில் உணவளிக்காமை இவைகளே மிருக வதையாகும்.இவைகள் இஸ்லாத்தின் பார்வையில் மிகக் கடுமையான குற்றங்களாகும்.ஒரு பெண் ஒரு பூனையினை கட்டி வைத்து உணவளிக்காமல் இருந்ததன் காரணமாக அந்த பூனை இறந்தது.இந்தப் பெண் நரகத்திற்குரியவளாக பல ஹதீத்கள் உள்ளன.இதே போன்று ஒருவர் தாகித்திருந்த நாய்க்கு நீர் புகட்டுகிறார்.இந்த மனிதரின் பாவத்தினை அல்லாஹ் மனித்து சுவாத்தினை வழங்குகிறான்.இவ் இரண்டு ஹதீத்களினையும் நன்கு ஆராய்ந்தாலே இஸ்லாம் உயிரினங்களுக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ளலாம்.

எனவே,இவ் விடயத்தில் முஸ்லிம்கள் ஏனைய மதத்தினருக்கு சிறந்த புரிதலினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளினை மேற் கொள்ள வேண்டும்.அதை விட்டு விட்டு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் என எதிரும் புதிருமான செயற்பாடுகளினை முன்னெடுப்பது பாதகமான விளைவுகளினையே ஏற்படுத்தும்.இறைச்சி உண்ணாமல் தவிர்த்து வாழும் மக்களிடையே உள்ள முஸ்லிம்கள்,இறைச்சியினை அவர்களுக்கு கண்களுக்கு புலப்படாத வண்ணம் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்.அதன் எலும்பு,தோல் போன்றவற்றினை அவர்களின் கண்களில் அகப்படாத வண்ணம் அப்புறப்படுத்தும் வழிகளினையும் மேற்கொள்ள வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 

சம்மாந்துறை.