நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர் மூவருக்கு சுற்றாடல் செயற்பாட்டுக்காக அதி உயர் விருது !

எம்.வை.அமீர்
கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர் மூவருக்கு சுற்றாடல் செயற்பாட்டுக்காக அதி உயர் விருது ஜனாதிபதி பதக்கம் 22.10.2015 ஆம் திகதி கிடைக்கவுள்ளது 
சிறந்த சுற்றாடல் செயற்பாட்டுக்காக, 
 
ஏ.எச்.இன்பாசா ஹமீட்
எம்.ஐ.ஏ.இஹ்ஜாஸ்  
ஏ.எம்.பாத்திமா ஷராபா 
ஆகிய மூன்றுமாணவர்களுமே ஜனாதிபதி மாளிகையில் வைத்து சுற்றாடல் செயற்பாட்டுக்காக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களினால் தங்கப்பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்படவுள்ளனர். 
குறித்த மாணவர்கள் இவ்வாறான அதி உயர் விருதினைப் பெறுவதற்கு கடந்த 2008 ஆண்டு தொடக்கம் இன்றுவரை கிழக்குமாகாண சுற்றாடல் உதவிப்பணிப்பாளர் எம்.எ.சீ.நஜீப் அதிபர் எஸ்.எம்.எம்.ஜபீர். சுற்றாடல் உத்தியோகத்தர் கே.எல்.அலிஹசன், சுற்றாடல் ஆலோசகர் எம்.ரீ.நௌபல் அலி, சுற்றாடல் முன்னோடி பொறுப்பாசிரியை எஸ்.எச்.எம். உம்மு ஐமன் ஆகியோரினதும் குறித்த மாணவர்களின் பெற்றோர்களின் அயராத உழைப்பே காரணம் என்றும் சுற்றாடல் ஆலோசகர் எம்.ரீ.நௌபல் அலி தெரிவித்தார். 
இவ்விருதினை நிந்தவூர் 17ஆம் கிராம சேவகர் பிரிவை சேர்ந்த MIM. அப்துல் ஹமீட், SL. சபீனா ஹமீட் என்பவர்களின் புதல்வியான AH.இன்பாசா ஹமீட், நிந்தவூர் 19ஆம் கிராம சேவகர் பிரிவை சேர்ந்த முஆ. இஸ்மாயீல், AB. சித்தி சூரியா என்பவர்களின் புதல்வரான MIM. இஹ்ஜாஸ், நிந்தவூர் 18ஆம் கிராம சேவகர் பிரிவை சேர்ந்த A. அச்சு முஹம்மட், A. ஹாஜரா என்பவர்களின் புதல்வியான AM. பாதிமா ஷறாபா ஆகியோர் பெற இருப்பது குறிப்பிடதக்கது.