(வீடியோ) பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரங்கேற்றும்., நாடகம் முஜிபுர் ரஹ்மான்…!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

கடந்த முறை அரக்கேற்றிய நாடகத்தினை போன்ற இம்முறையும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரங்கேற்ற நினைக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.

*************************************************************************************

இன்று உலகலவில் இருக்கக்கூடிய பிரசனைகளில் பலஸ்தீன மக்களின் பிரச்சனையானது மிகவும் முக்கியமான பிரச்சனையாக காணப்படுக்கின்றது. கடந்த பல தசாப்பதங்களாக எமது இஸ்லாமிய பாலஸ்தீன சமூகமானது இஸ்ரேலினால் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்து வருக்கின்றனர். அவர்கள் பிறந்த மண்னிலேயே அகதிகளாக வாழுக்கின்ற உலகத்தில் எங்குமில்லாத கொடுமையினை பலஸ்தீன மக்கள் அனுபவித்து வருகின்றனர். சாதாரணமாக இஸ்ரேல் – பலஸ்தீன பதற்றம் ஏற்படுவதற்கு பெரிதாக உடனடி காரணம் தேட தேவை இருக்காது. போகின்ற போக்கில் வெடிக்காத பட்டாசை கொளுத்தி விட்டாலும் அதனையே சாக்காக வைத்து நூற்றுக்கு அதிகமான அப்பாவி பலஸ்தீனர்களை கொன்று குவிப்பதற்கான ஒரு மாதகாலத்திற்கு மேலானா யுத்த பிரகடணத்தை இஸ்ரேல் அரசாங்கம் பலஸ்தீன மக்களுக்கு எதிராக தினித்துவிடும்.

இது இன்றைக்கு முடியப் போவதில்லை என்று வேடிக்கை பார்ப்பவர்கள் நினைக்கும் போதே திடீரென அமைதி திரும்பும். ஒருசில நாட்களில் மீண்டும் பழைய கதைதான். இப்போதும் பலஸ்தீனின் மேற்குக் கரை மற்றும் ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலம் பகுதிகளில் பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த குறுக்கே வரும் இஸ்ரேல் படையினருடன் கல்லெறிந்தே மோதலில் ஈடுபடுகின்றனர். மறுபக்கம் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை ஏதோ கணரக ஆயுதங்களுடன் சண்டைக்கு வரும் எதிரிப் படையைப் போலவே இஸ்ரேல் இராணுவம் நடத்துகிறது. கல்லெறிபவர்களை சமாளிக்கத் தெரியாத இந்த இஸ்ரேல் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். அத்தோடு சேர்த்து கண்ணீர்ப் புகை, ரப்பர் குண்டு தாக்குதல் என்று எக்கச்சக்க வன்முறைகள்.

000

ஒருசில இளைஞர்கள் ஆடு, மாடு கணக்காக சுட்டு கொல்லப் படுக்கின்றனர். இது பழகிப் போன் செய்தி என்பதாலோ என்னமோ சர்வதேசம் இஸ்ரேல், பலஸதீன் பதற்றத்தை பெரிதாக கணக்கில் எடுப்பதில்லை. இரண்டு தினங்களுக்கு முன் சம்பிரதாயத்திற்கு அமெரிக்கா ஒரு கவலை அறிக்கையை வெளியிட்டிருந்தது. ஒட்டு மொத்தத்தில் பலஸ்தீனர்கள் இன்று முகம்கொடுக்கும் பிரச்சினைக்கு யாரிடமும் தீர்வில்லை என்ற நிலையில் மூன்றாவது முறையாகவும் ஒரு இன்திபாதா போராட்டத்தையாவது செய்து பார்ப்போம் என்று பலஸ்தீனர்கள் முன்வந்தால் அதில் தவறேதுமில்லை.

கடந்த இரு வார காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு பாலஸ்தீன மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான ஜெரூசலம், மேற்கு கரை போன்ற பகுதிகளில் அந்த மக்களுக்கும், அவர்களின் புனித தலங்களுக்கும் எதிராக மிக மோசமான பயங்கரவாதத்தை மேற்கொண்டு வருகின்றது கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய அராஜகங்கள் பாலஸ்தீன புனித பூமியில் அதிகரித்துள்ளது இஸ்ரேலிய அராஜகங்களை எதிர்த்து மக்கள் மேற்கு கரை மற்றும் காஸா பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. மேற்கு கரை பகுதியில் இன்று இடம் பெற்ற இஸ்ரேலிய அராஜக துப்பாக்கி தாக்குதலில் இரு பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துப்பாக்கி சூட்டு தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பும் இஸ்ரேலிய இராணுவம் புனித நோன்புகாலம் என்று பாரமல் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் பாலஸ்தீனத்தின் மீது கட்டவிழ்த்து விட்டு பாலஸ்தீனர் இளைஞர்களின் உணர்ச்சியினை தூண்டி அதனை தனக்கு சாதகமாக பயண்டுத்தி ஒரு கொலையில் இருந்து ஆரம்பித்து கடைசியில்  பாலாஸ்தீன பச்சிளம் குழந்தைகள் உட்பட 2110 பாலஸ்தீனர்களை கொன்று குவித்தது. அந்த நேரத்தில்தான் போலிய நாடகமாடிக்கொண்டிந்த உலக நாடுகளும் மேற்கத்தைய உலகின் ஆதிக்கத்திற்கு வாய்மூடி மெளனித்திருக்கும் தங்களை முஸ்லிம் நாடுகளாக பரிசாற்றிக்கொள்ளும் அரபு நாடுகள் இஸ்ரேலுக்கெதிரான கருத்துக்களை வெளியிட்டன. ஆனால் மறுபக்கத்தில் காசா நகரினை முழுமையாக தரைமட்டமாக்கிய இஸ்ரேலிய இராணுவம் பாலச்தீனத்திற்கு எதிராக தான் நினைத்திருந்த நாடகத்தினை முழுமையாக அரங்கேற்றிவிட்ட சந்தோசத்துடன் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவந்திருந்தது.

எமது நாட்டிலும் கடைசி நேரத்திலேயே எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள், சமூகத்த தலைவர்கள் எல்லாம் இஸ்ரேலிய அராஜகத்திற்கு எதிராக குரல்கொடுக்க  ஆர்பாட்டாங்கள் எடுக்கத் தொடங்கினர். அதுவும் தங்களது அரசியல் இருப்புக்களை தக்கவைத்து கொள்வதற்காகவும், தங்களுடைய கொள்கைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காவுமே அவ்வாறான குரல் எழுப்புவதிலும், இஸ்ரேலுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குமான முடிகளில் இறங்கியிருந்தனர். இன்னும் பல முஸ்லிம் அமைப்புக்களும் அரசியல் முக்கியஸ்தர்களும் மஹிந்தராஜ பக்ஸ்ஸவின் அரசாங்கத்தினை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக தங்களது சகோதர உம்மத்துக்கள் பாலஸ்தீனத்தில் எப்படி அழிந்தாலும் பரவாய்யில்லை எனக் கருத்தில் கொண்டு வாய்திறக்கவே மறுத்துவிட்டனர்.  ஆனால் நானும் எனது சகோதரர்களும் எங்களால் முடிந்தளவு நாங்கள் ஒரு மாகாண சபை உறுப்பினராக கூட கடந்த மஹிந்த ராஜபக்ஸ்சவின் அரசாங்கம் இறுக்கின்ற நிலையில் எதிர்கட்சியில் இருந்தும் வீதிக்கு வந்து இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாடங்களில் குதித்திருந்தோம் அல்ஹம்துல்லில்லாஹ். எது எவ்வாறாக இருந்து இஸ்ரேல் அரசாங்கமும் இராணுவமும் பாலஸ்தீனத்தில் எதனை சாதிக்க நினைத்ததோ அதனை கடந்த ஒரு வருடதிற்கு முன்பு சாதித்தே இருந்தது. இதற்கு உலகில் உள்ள ஒவ்வொவொரு முஸ்லிமும் பதில் கூறியே ஆக வேண்டும்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இஸ்ரேல் இராணுமவம் பாலஸ்தீனத்தில் அரங்கேற்றிய நாடகத்தினை போன்றே இம்முறையும் ஏதாவது சாட்டினை தனக்கு சாதகமாக பயண்டுத்திக் கொண்டு ஒன்றிருந்து பாலஸ்தீனர்களை கொலை செய்ய ஆரம்பித்த இஸ்ரேலிய இராணுவம் இன்று 45 சகோதர  பாலஸ்தீனர்களை கொன்று குவித்துள்ளது. அப்படியிருந்தும் அரபுலகம் ஒரு புறத்தில் வாய்மூடியிருக்க மறுபுறத்தில் எமது முஸ்லிம் அரசியல் வாதிகளும் சயத்தலைவர்களும் கடந்த முறை மெளனம் காத்தினை போன்றே இம்முறையும் வாய் மூடியிருக்கின்றனர். கடந்த வருடத்தில் பாலச்தீனத்தில் இஸ்ரேல் அரங்கேற்றிய நாடகத்தினை விடவும் பல மடங்கு அதிகமான கொலை வெறியுடன் இவ்வருடம் இந்நாடகத்தினை முன்கொண்டு செல்வதற்கான பலசாத்தியங்கள் தென்படுபவையாகவே இருக்கின்றது. 

இந்த நட்டிலே நல்லாட்சியினை நிலை பெறச்செய வேண்டும் என நாங்கள் ஆட்சியில் அமர்த்திய எமது அதிமேதகு ஜனாதிபதியும் எமது அரசாங்கமும் தற்பொழுது இஸ்ரேல் அரசாங்கமும் அதன் இராணுவமும் அப்பாவி பாலஸ்தீன குழந்தகளையும் பொது மக்களையும் ஒரு நீண்ட கால தூரநோக்குடைய கொலை வெறியுடன் பல எண்ணிக்கையான பாலஸ்தீனர்களின் உயிர்களை மையமாக கொண்டு கட்டவிழ்த்து விட்டுள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான அராஜகத்தினை நிச்சயமாக எதிர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருப்பதோடு, எமது முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூகசிந்தனையாளர்கள், மார்க்கத்தலைவர்கள், முஸ்லிம் அமைப்புக்கள், இறுதிவரைக்கும் வாய்மூடி மெளனித்திருக்காமல் உலக நாடுகள் விழித்துக்கொள்ளுமளவிற்கு தங்களுடைய எதிர்ப்புக்களையும், பாலஸ்தீன மக்களுக்கான துவாபிரார்தனைகளையும், பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத முறையில் ஏற்பாடு செய்ய  வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன். 

 

.

.