இலங்கையின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதித் தலைவர் ஸான் போவன் தலைமையிலான பிரதிநிதிகள், ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் செல்லும் போது பல்வேறு சீன உதவியுடனான அபிவிருத்தித் திட்டங்களை காண முடிவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திலும் நாட்டின் அபிவிருத்திக்காக சீனா பங்களிப்பினை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வறுமை ஒழிப்பு முயற்சிகளிலும் சீனாவின் பூரண ஒத்துழைப்பை கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சி இலங்கையில் ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவுகள் வலுப்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சீனத்தூதுவர் வழங்கி வரும் பங்களிப்பும் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்