தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜானதிபதியுடன் பேசியுள்ளேன் : முதலமைச்சர் !

ஊடகப் பிரிவு 

 

DSC_5504_Fotor

கிழக்கு மாகாண சபையின் 47 ஆவது அமர்வு இன்று காலை செவ்வாய்க்கிழமை (20) சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் ஆரம்பமானது.

இச்சபை அமர்வின்போது, சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசண்ன தமிழ் சிறைக் கைதிகளை விடுவிக்கக்கோரி பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றினார்,

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த பல வருடங்களாக எவ்வித விசாரணைகளுமின்றி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளை விடுவிக்கக்கோரி முன்வைத்த பிரேரணை தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் இப்பிரேரணையை ஆதரித்துப் பேசியதுடன், சிங்கள உறுப்பினர்கள் பேசும்போது:  விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட சிறைக் கைதிகளை விடுவிப்பதில் தங்களுக்கு விருப்பமில்லை எனவும் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட பிரேரணை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் கருத்துத் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைகளில் எந்த விசாரணைகளுமின்றி பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி தனது மன்னிப்பின் மூலமே விடுதலை செய்யமுடியும் என்பதனால் இது சம்மந்தமாக நான் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன். விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.