உடலகம மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகள் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரும், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான மெக்ஸ்வெல் பரணகமவினால் வழங்கப்பட்ட அறிக்கை மற்றும் 17 அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் கொலை செய்யப்பட்ட விடயம் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் ஓய்வு பெற்ற நீதிபதி நிஸ்ஸங்க உடலகம தலைமையிலான ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணை அறிக்கையுமே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யோசனையும் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது