கிழக்கு மாகாண சுதேச வைத்தியத் துறைக்கு நூறு மில்லியன் நிதி தேவை -முதலமைச்சர் கோரிக்கை

 

முதலமைச்சர் ஊடகப்பிரிவு 

 

கிழக்கு மாகாணத்தில் இன்று சுதேச மருத்துவத்தை நாடிச் செல்லும் மக்களின் தொகை அதிகரித்துள்ளது. சுதேச மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள தேவைகளை ஓரளவேண்டும் பூர்த்தி செய்ய சுமார் 100 மில்லியன் நிதி தேவைப்படுகிறது. இதனை மத்திய சுகாதார அமைச்சு அவசரமாக வழங்க வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கோரிக்கை விடுத்துள்ளார்.

DSC_5080_Fotor

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு பல கோரிக்கைகள் அடங்கிய கடிதத்துடன் குறிப்பிட்ட சுதேச மருத்துவத் துறையின் தேவைக்காகவும் நிதியொதுக்குமாறு கேட்டு கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.