இஸ்லாத்தின் பார்வையில் வாரிசுரிமை அரசியல்….

உலகத்தில் அதிகமான மத்திய கிழக்கு முஸ்லிம்  நாடுகளில் பல தசாப்தங்களாக  மன்னர் ஆட்சி முறையே நடை முறையில் இருந்து கொண்டு வருவதை  நாம் அறிந்ததே இது இவர்களுடைய குடும்ப  வாரிசூனுாடாக பெறப் பட்ட ஆட்சி முறையே தவிர  இஸ்லாம் இ்வ்வாறான குடும்ப வாரிசுரிமை அரசியலை அனுமதி்க்க வில்லை மாறாக அது தகுதியானவர்களிடமே ஒப்படைக்க  வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தி சொல்கின்றது

நபி (ஸல்) அவர்களின் மரணத்துக்கு பின்  இஸ்லாமிய கிலாபத்தின்  முதலாவது கலீபாவாக ஆட்சி செய்த அபூ பக்கர் ரலி அவர்களுக்கு  கூட நபி (ஸல்)  அவர்கள்  அந்த பதவியை வழங்கிச் .விட்டுச் செல்லவுமில்லை வேறு யாரையும் நியமனம் செய்து விட்டு மரணிக்கவுமில்லை  என்பதை இஸ்லாமிய வரலாறு முழுதிலுமிருந்து  எம்மால் அறிய முடிகின்றது

நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மரணத்துக்கு பின் கூட யார் ஆட்சிப் பொருப்பை நிர்வகிப்பது என்ற கருத்து மோதல்கள் ஏற்பட்டது அபூ பக்கர் ரலி அவர்களுக்கும் உள்ளூர் வாசியான சஃது அவர்களுக்கும் கடும் போட்டி கூட நிலவியது ஆனால் மக்களின் அதிகப்படியான  ஆதரவினால்தான்  மக்கள் அவரிடத்தில் கொடுத்தார்கள்   அந்த தகுதி அவரிடம் இருந்ததை மக்கள் கண்டதால்தான் பொருப்பை ஒப்படைத்தனர் என்பதையும் நாம் அறிந்து வைத்து கொள்ள வேண்டும்

ஒரு மனிதன் மரணித்தால் அவனது சொத்துக்கள் அவனது குடும்பத்துக்கே உரியது என்று இஸ்லாமிய உலகுக்கு சட்டம் எய்திய நபிகள் நாயகம் அவர்கள் தாம் மரணித்த பின் தான் விட்டுச் செல்கின்ற சொத்துக்கள் எதற்கும் எனது குடும்பத்தினர் வாரிசாக முடியாது மாறாக அனைத்து சொத்துக்களும் அரச கரூவுலத்துக்கே சேர்க்க வேண்டும்  என்று கூறியிருக்கையில் தமக்கு உடமையான சொத்துக்களையே அரச கரூவுலத்தில் சேர்க்குமாறு வலியுறுத்திய நபி (ஸல்) அவர்கள் தமக்கு உடமையில்லாததை தனது வாரிசுகளுக்கு கொடுக்க வேண்டும் என்று எவ்வாறு கூறியிருப்பார்

கடந்த சில தசாப்தங்களாக மன்னர் ஆட்சி முறை நடை பெற்று வந்த சில முஸ்லிம்  நாடுகளில் அங்குள்ள மக்களின் பொருளாதார வசதியை மேம் படுத்தி கொடுக்காததன் காரணமாகவும் சம ரீதியான  உரிமை  வழங்காததன்  விளைவாகவும் அங்குள்ள  அதிகமான மக்கள் போராட்டங்களை நடத்தி அதன் மூலம் பல உயிர் சேதங்கள் சொத்துக்கள் போன்ற வற்றை எல்லாம் இழந்து மிக நீண்ட போராட்டத்துக்கு பின்னர்  ஒரு ஜனநாயகமான ஆட்சி முறையை தேர்வு செய்து கொண்டார்கள்  குறிப்பாக சொல்லப் போனால் அந்த நாடுகளில் நடந்தது மன்னர் ஆட்சியே அல்ல கொடுங் கோல் ஆட்சியே என்பதையும் எம்மால் அறிய முடிகின்றது   இன்று வரையிலும் கூட சில நாடுகளில் மன்னர் ஆட்சி செய்கின்ற கொடுங் கோல் ஆட்சியாளுக் கெதிராக போராட்டங்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளது ஆனால் தற்போது அது கொள்கை ரீதியான பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது

உதாரணமாக மத்திய கிழக்கில் மன்னர் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற சவூதி அரேபியா கத்தார் துபாய் குவைத் ஜோர்தான் ஓமான் பஹ்ரைன் போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால் அங்கு ஒரளவுக்கு சுமூகமான ஆட்சி முறையே நடை பெற்று வருவதை எம்மால் காண முடிகின்றது குறிப்பாக சொல்லப் போனால் ஜனநாயக ரீதியான நாட்டில் வாழும்  மக்களை விட மன்னர் ஆட்சி நடைபெற்று வருகின்ற இந்த நாடுகளில் மக்கள் பல மடங்கு செல்வச் செழிப்புடனும் சுதந்திரத்துடனுமே  வாழ்கிறார்கள்

இதற்கு முக்கிய காரணம் அங்கு  எண்ணெய் வளங்கள் இருப்பதாலயே மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றார்கள் என்றால் ஷீஆக்களின் அமோம ஆதிக்கத்தின் கீழ் உள்ள  ஈராக் சிரியா   போன்ற நாடுகளிலும் எண்னெய் வளங்கள் இருக்கின்றது தானே பிறகு ஏன் அங்கு  ஆட்சியாளருக் கெதிராக மக்கள் கிளர்ந்தெளுகின்றார்கள் என்று பார்ப்போமேயானால்  அங்குள்ள ஆட்சியாளர்கள் ஒரு கொள்கைக்கு சார்பாக ஆட்சி செய்து மற்றயை கொள்கையுடையவரை அடிமையாக்கி தானும் தன்னை சுற்றி உள்ளவர்களும் செல்வச் செளிப்புடன் சொகுசாக வாழ்ந்து விட்டு மக்களை கை விட்டு விடுவதே அங்கு ஆட்சியாளருக் கெதிராக மக்கள் கிளர்ந்தெளுவதற்கு முக்கிய பின்னனி காரணியாக இருக்கின்றது

சுன்னி முஸ்லிம்களின் ஆதிக்கத்தின் கீழ் இயங்குகின்ற சவூதி அரேபியா கத்தார் துபாய் குவைத் போன்ற நாடுகளில் இவ்வாறான பிரச்சினைகள் கிளம்பாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் அந்த நாட்டு மக்களுக்கு அங்கய  மன்னர் ஆட்சியின் கீழ் இயங்குகின்ற அரசாங்கம் மக்களின் பொருளாதர வளர்ச்சியை மேம் படுத்தி கொடுத்து அங்குள்ள மக்களையும் கருத்துச் சுதந்திரத்துடன் தனது கொள்கையை வழிநடத்திச் செல்வதற்கும் வழி வகுத்து கொடுத்திருக்கின்றது  ஆகவேதான்  மேற்கத்தய நாடுகளின் அடிமைகளாக இந் நாடுகள்  இருந்தாலும் மக்கள் அங்கு பிரச்சினைகளின்றி சுமூகமாக வாழ்கிறார்கள்

சம காலம் தொட்டு  முஸ்லிம்களுக்கு  கொள்கை ரீதியாக  மா பெரும் சவாலாக உருவெடுத்துள்ள ஷீஆக்கள் இஸ்லாத்திலிருந்து கொள்கை ரீதியாக கருத்து முரண் படுவதற்கு முக்கிய காரணமே இந்த வாரிசுரிமை அரசியலே நபி (ஸல்) அவர்களின் வாரிசுகள் மாத்திரமே நபி அவர்களுக்கு பின் ஆட்சி செய்வதற்கு தகுதியானவர் என நம்புகிறார்கள்  ஆதலால்  நபிகளாரின் மருகமன் அலீ (ரலி) அவர்கள்தான் முதலாம்  கலீபாவுக்கு தகுதியானவர் என்றும்  கூறுகிறார்கள் ஆனால் இந்த ஷீஆக்களின் ஆதிக்கத்தின் கீழ்  இயங்குகின்ற நாடுகளிலயே  மக்கள் ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சி செய்கிறார்கள் என்றால் இவர்கள் எந்த அளவுக்கு இஸ்லாத்தின் தாத்பெறியத்தையும் மகத்துவத்தையும்  அறியாமல் முர்க்கத்தனமாக மார்க்கத்தை எதிர்க்கிறார்கள்  என்று பாருங்கள்

கடைசியாக இதிலிருந்து நாம் எதை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு ஆட்சித் தலைவரின் வாரிசுக்கு அதற்கான தகுதியிருந்து அவர் அதனை பெற்றால் அதனை இஸ்லாம் எந்த வீதத்திலும் தடை செய்ய வில்லை ஆனால் தன் நாட்டின் கீழ் வாழ்கின்ற அனைத்தின மக்களையும் சம அந்தஸ்த்துடனும் சம நீதியுடனும் வழி.நடத்த  வேண்டும் இதனால் தான் இஸ்லாமிய வரலாற்றில் கூட அலி (ரலி) அவர்களின் மரணத்திற்கு பிற் பாடு அவர்களின் மகன் ஹஸன் (ரலி) அவர்களிடத்தில் மக்கள் ஆட்சியை ஒப்படைத்தார்கள்

வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை