அரசியல் அரங்கிலே மிக முக்கியமான சர்வதேச நகர்வுகளுடன் இலங்கையின் அரசியல் கூர்மையடைத்திருக்கிற சூழலில் தேசிய காங்கிரஸின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் சிலருடைய கற்பனைவாதம் மித மிஞ்சி முஸ்லீம் சமுகத்தை மிக இக்கட்டான சந்தர்பங்களிலும் கை கழுவி சுய நல பதவி மோக அரசியல் செய்யும் வங்குரோத்து அரசியல் கட்சியும் அதன் புதிய போராளிகளும் புதுமையான கண்டுபிடிப்புகளில் இறங்கிஇருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கான இயக்கமொன்றை கட்டமைத்து தேசிய ரீதியில் பல பரிமாணங்களை பெற்றுக் கொடுத்த மறைந்த தலைவரின் கனவாகிய கட்சி இன்று அனைத்து மாவட்டங்களிலும் வங்குரோத்து நிலை அடைந்திருப்பது யாரலும் மறுக்கமுடியாது
இன்று தேசிய காங்கிஸின் அரசியல் வியூகங்கள் தவறியதே தவிர மக்களுக்கான எமது பணி முற்றுப் பெறவில்லை.
மறைந்த தலைவரினால் உருவாக்கப்பட்ட கட்சியை அழித்தொழிக்க சதிகள் நிகழ்ந்த போதல்லாம் மறைந்த தலைவரின் கரங்களை பலப்படுத்தி சவால்களை முறியடித்த தலைமைதான் அதாஉல்லாஹ் ஆனால் சதிகாரர்களின் சதிமானங்களுக்கு தங்களை இசைவாக்கி கொண்ட சதிகாரர்கள் இன்று முண்ணனி போரளிகளாக தங்களை இனங்காட்டி சமுகத்தை வழி நடத்த முனைவது வேடிக்கையானது .
தங்கள் இருந்த இடங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு அரசியல் அநாதரவாகக்கிடந்த சிலருக்கு இந்த தேசிய காங்கிரஸ் தான் உயிர் பெற ஒட்சிசன் வழங்கி அரசியல் அரங்கில் அவர்களை அடையாளப்படுத்தியது.
அதன் பின் அந்தக் கட்சியையும் அதன் தலைமையையும் காட்டி அதற்கெதிரான வாக்காளர்களை கொண்டு சிறு அதிகாரத்தை பெற்றுக்கொண்ட சிலர் அதாஉல்லாவை விமர்சிப்பது தொடர்பில் மீள் பரிசிலிக்க வேண்டும்.
முஸ்லீம் சமுகம்அரசியல் அனாதை யாவதை தடுப்பதற்காக மேற் கொண்ட மிகப் பாரிய போராட்டத்தில் அதாஉல்லாஹ் பதவியை இழந்தார் என்பதை எம் சமுகம் உணர்த்து கொள்ளும் காலம் தொலைவிலில்லை.