தாறுஸ்ஸலாம் கலாபீடத்திலிருந்து நான்கு மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு !

அசாஹீம்

 

வாழைச்சேனை தியாவட்டுவான் பிரதேசத்தில் இயங்கி வரும் தாறுஸ்ஸலாம் கலாபீடத்திலிருந்து கடந்த ஆண்டு (2014) கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய நான்கு மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்யபினைப் பெற்றுள்ளதாக கலாபீடத்தின் செயலாளர் மௌலவி ஏ.எல்.முஸ்தபா தெரிவித்தார்.

 

2000ம் ஆண்டு பல சவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்திச் செல்லப்படுகின்ற தாறுஸ்ஸலாம் கலாபீடம் நிரந்தர கட்டிடம் இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களினால் கைவிடப்பட்ட நிலையில் கலாபீடத்தின் தேவை கருதி மீண்டும் 2009ஆம் ஆண்டு மீளவும் ஆரம்பிக்கப்பட்டது.

01_Fotor
மீள் உருவாக்கத்தின் போது முதற் தொகுதி மாணவர்களான இவர்கள், மார்க்கக் கல்வியும் பாடசாலைக் கல்வியும் நிரைவாகப் போதிக்கப்பட்டதன் வெளிப்பாடாக ஆலிம்களாக வெளியேறியிருக்கும் அதேவேளை பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பையும் பெற்றிருக்கின்றனர்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை; எமது கலாபீடத்தின் வளர்ச்சிக்காக முடியுமான உதவி ஒத்தாசைகளை நல்கி வரும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் எமது கலாபீடத்தின் நிருவாகமும், கலாபீடத்தின் அதிபர், ஆசியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பெருமிதம் அடைகின்றனர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது திருப்பொருத்தத்தை மாத்திரம் நாடி செய்யப்பட்ட பணியாக இதனை ஏற்றுக் கொண்டு இதில் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் ஈருலகிலும் நற்பாக்கியமளிப்பானாக என்று அவர் மேலும் தெரிவித்தார்.