அஸ்ரப் ஏ சமத்
உள்ளுராட்சித் தோ்தல்கள் திட்டமிட்ட படி மாா்ச் மாதம் நடைபெறும். 2014ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சா் அதாவுல்லா பாராளுமன்றத்தில் சமா்ப்பித்த கலப்புத் தோ்தல்முறை நடைபெறும். 70 வீதம் வட்டார முறைமையும் 30வீதம் விகிதாசார தோ்தல் முறையுமாகும். என உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சா் ஜனாதிபதி சட்டத்தரணி பைசா் முஸ்தாப நேற்று(16) அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தாா்.
இம்மாநாட்டில் பிரதியமைச்சா் கருநாரத்தின பரணவித்தாரண மற்றும் அமைச்சின் செயலாளா் கமல் பத்மசிரியும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தாா்.
அமைச்சா் பைசா் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் –
மேலும் இந்த வாரத்தில் தெஹிவளை-கல்கிசை கொழும்பு மொரட்டுவை மகரகம போன்ற மாநகரங்கள் ஆட்சிக் காலம் முடிவடைகின்றன. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமா் ரணில் ஆகியோா்களது வேண்டுதலுக்கிணங்க 22 உள்ளுராட்சி சபைகளது ஆட்சிக்காலத்தினை டிசம்பா் 31ஆம் திகதி வரை நீடித்துக் கொடுத்துள்ளளோம். அதற்கான வா்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளோம்.
இந்த அமை்ச்சினால் உலக வங்கி மற்றும் வெளிநாட்டுத் திட்டங்கள் 16 திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன இத்திட்டம் ஊடாக ஒவ்வொரு உள்ளுராட்சிச் சபைகளது பாரிய திட்டங்களுக்கு 10 மில்லியன் ருபா வருடா வருடம் வழங்கப்பட்டு சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கல்முனை மாநகரில் சாய்ந்தமருது பிரதேச சபை அமைச்சா் ரவுப் ஹக்கீம் மற்றும் நுவரெலியா மாவட்டததில் அமைச்சா் மனோ கனேசன் ஆகியோா்களது யோசனையான பிரதேச சபைகள் உருவாக்குதல்,தரம் உயா்த்துதல் எல்லை நிர்ணயம் ஆகிய வற்றினை மேற்கொள்வது உப கபினட் அமைக்கப்பட்டுள்ளது. அவா்களது உப அறிக்கை டிசம்பா் முன் ஆரயாப்பட்டதும் அவை ஜனாதிபதி பிரதமா் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து அமுல்படுத்தப்படும்.
எல்லை நிர்ணம் 70 வீதம் முடிவடைந்துள்ளது. மேலும் 30 வீதம் மீதமாக உள்ளது. அவைகள் மிக விரைவில் நிறைவடையும். உள்ளுராட்சி சபை என்பது கழிவுகளை அகற்றுதல் அல்லது பாதைகளுக்கு வீதி லாம்பு இடுதல் என்ற வேலை மட்டும் இல்லாது பாடசாலை வைத்தியசாலை போன்ற மக்களது அடிப்படைத் தேவைகளை அபிவிருத்தி செய்யக் கூடிய வகையில் உள்ளுராட்சி சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும். .
இந்த நாட்டில் உள்ள உள்ளுராட்சி சபைகளின் தலைவா்கள் உட்பட் அதிகாரிகள் மேற்கொள்ளும் லஞ்சம் களவு, அதிகார துஸ்பிரயோகம் என்பவற்றை கவணிக்க 24 மணித்தியாலயம் இயங்கக் கூடிய பொதுமக்கள் முறைப்பாடு செய்யக் கூடிய வகையில் ஒரு விசேட பொலிஸ் பிரிவை எமது அமைச்சில் நிறுவும் மாறும் பொலிஸ் இண்ஸ்பக்டரிடம் கோ்ரிக்கை விடுத்துள்ளேன் என அமைச்சா் பைசா் முஸ்தாப தெரிவித்தாா்.
பிரதியமைச்சா் முன்னால் செயலாளா் அவா் தலைமையில் சகல உள்ளுராட்சி சபைகளது நிர்வாகம் பற்றி பாரிய மாற்றமொன்று தயாரிக்கப்பட்டு டிசம்பா் 31திகதி முன்னா் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சா் பைசா் முஸ்தாப தெரிவித்தாா்.