ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்
காரைதீவு சன்முகா மகா வித்தியலயத்தில் சர்வதேச கைகழுவுதல் தினம் இன்று(16) சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் திருவாளர்.ஆர்.ரகுபதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி.கே.பரதன் கந்தசாமி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.வேல்முருகு, கல்முனை கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம்.இப்றாகீம் உள்ளிட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
நமது அன்றாட வாழ்க்கையில் மிக இலகுவாக நுண்ணங்கிகள் தொற்றிக் கொள்ளும் பல சந்தர்ப்பங்கள், அவற்றின் தாக்கங்கள், இப்பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவது எப்படி? போன்ற விடயங்கள் மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதோடு, உரிய முறையில் மாணவர்கள் தமது கரங்களை எவ்வாறு சுத்தமாகக் கழுவவேண்டும் என்பது பற்றியும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் செயன்முறையாகச் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் மிக ஆர்வமாகக் கலந்து கொண்டனர் என்று எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.