வரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துப் பெண் !

உலக வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஆண்கள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கலந்து கொண்டு விளையாடுகிறார்.

அவுஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்கள் கிளப் அணியும், போர்ட் அட்டிலெய்டு அணியும் மோதுகின்ற போட்டி 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

நாளை (17)  ஆரம்பமாகும் இந்தப் போட்டித் தொடரில் வடக்கு மாவட்டங்களுக்கான கிளப் அணிக்காக இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் காப்பாளரான சாரா டெய்லர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

சாரா டெய்லர் இங்கிலாந்து மகளிர் அணிக்காக 98 ஒரு நாள் சர்வதேசப் போட்டியிலும் 73 T20 போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளார்.

வடக்கு மாவட்டங்கள் கிளப் அணியில் இவர் 8 ஆவது வீரராகக் களமிறங்கவுள்ளார்.

கிரிகெட் வரலாற்றியில் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பெண் ஒருவர் விளையாடுவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.