டெல்லியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும் அப்துல்கலாமின் அரிய புகைப்படங்கள் அடங்கிய ‘டாக்டர் கலாமின் வாழ்வில் ஒரு கொண்டாட்டம்’ என்னும் கண்காட்சி ஒன்றும் இடம் பெற்றது.
இராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தில் நிரந்தரமாக இடம் பெறவிருக்கும் இந்த கண்காட்சியையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 84வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனைமுன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி அப்துல் கலாம் அவர்களை பற்றிய தனது நினைவுகளையும் கூட்டத்தினரிடையே நினைவு கூர்ந்தார்.
கலாமின் வாழ்க்கை இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்கும் என்றார்.
அப்துல் கலாம் இல்லாத நிலையில் அவரது எண்ணங்களை பூர்த்தி செய்வது சவாலானது. அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவராக கலாம் திகழ்ந்தார் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.