“கல்முனை பிரதேசத்தின் பல்கலைக்கழக அனுமதி மற்றும் உயர் தர கல்வி நிலை” ஆய்வு அறிக்கை வெளியீடு!

-கலீல் எஸ். முஹம்மத்-
“கல்முனை பிரதேசத்தின் பல்கலைக்கழக அனுமதி மற்றும் உயர் தர கல்வி நிலை” எனும் தொனிப்பொருளில் அமைந்த ஆய்வு அறிக்கை பல்கலைகழக மாணவர்களினது உதவியுடன் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் பொறியியலாளர் ஏ. எம். அஸ்லம் சஜாவினால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
Saja
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் கல்லூரியின் எம் எஸ் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்ற போதே இவ் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
எமது பிராந்தியத்தின் கல்வி நிலை அது தற்போது கொண்டுள்ள பின் தங்கிய அடைவு மட்டம் பல்கலைக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களது பரம்பல் குறித்து விரிவான விளக்கம் அடங்கிய எதிர்காலத்தில் இது குறித்தான கலந்துரையாடலுக்கான ஒரு முற்குறிப்பொன்றை இது உள்ளடக்கியுள்ளது
குறிப்பாக கல்முனை பிராந்தியம் கல்வி யில் பாரிய பின்னடவை சந்தித்து கொண்டிருக்கிறது. இதற்குரிய காரணங்கள் கண்டறியப்படுவதோடு இது குறித்தான வாதப்ப் பிரதி வாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு பின் தங்கியுள்ள எமது கல்வி நிலையினை முன்நேற்றுவதற்கு எதிர்காலத்தில் புத்திஜீவிகள் அனைவரினதும் ஒத்துழைப்பு பெறப்பட்டு புதியதோர் உபாயத்தனை கண்டறிந்து வழிநடாத்துவதற்கான அடிப்படையை இது கொண்டுள்ளது.
ஸாஹிரா கல்லூரியின் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கௌரவ அதிதியாகவும் ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவியும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான எம்.என்.மைமுனா அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.