இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் – காத்தான்குடியில் !

 

பழுலுல்லாஹ் பர்ஹான்
 
கடந்த 12 வருடங்களாக காத்தான்குடியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல்வேறு வகையான சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 
 
இரத்தப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இவ் இரத்ததான முகாம் எதிர்வரும் 18.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை காத்தான்குடி-06 பிரதான வீதியில் அமைந்துள்ள காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ளது.
DSC_00042_Fotor
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் தற்போது நிலவி வரும் இரத்தப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு “யார் ஓர் ஆத்மாவை வாழவைக்கிறாரோ அவர் முழு மனித சமூகத்தையும் வாழவைத்தவர் போலாவார்” எனும் அல்குர்ஆன் வசனத்தை தொனிப்பொருளாகக் கொண்டு இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் மேற்படி இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளது. 
18_Fotor
இதில் சகல பொது மக்களையும் கலந்து கொண்டு மனித உயிர் காக்கும் பணியில் கை கோர்க்குமாறு இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம்; வேண்டுகோள் விடுக்கின்றது. 
 
தங்களது வருகையை 077 334 6540, 077 177 6344,         077 893 3456 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாக உறுதிப்படுத்துமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டிக்கொள்கின்றனர். 
 
குறிப்பு பெண்கள் இரத்ததானம் செய்வதற்கு பிரத்தியேக ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.