தொழில் நுற்பவியல் ஆய்வுகூடமும் ,அல்-ஹிக்மா வித்தியாலயத்தில் வகுப்பறைக் கட்டடமும் திறப்பு விழா !

பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள தொழில் நுற்பவியல் ஆய்வுகூடமும்,அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலையில் 40 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப் பட்டுள்ள வகுப்பறைக் கட்டமும் திறந்து வைத்த நிகழ்வு இன்று புதன்கிழமை(14-10-2015)இடம் பெற்றது.

1-PMMA CADER-14-10-2015_Fotor

இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு கட்டங்களைத் திறந்து வைத்த்தார்.

சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவர் எடுத்த பெரும் முயற்சியின் காரணமாக 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் திகதி இந்த தொழில் நுற்பவியல் ஆய்வு கூடத்திற்கான அடிக்கல்; பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களினால் நடப்பட்டது.

3-PMMA CADER-14-10-2015_Fotor

இன்று இந்தக் கட்டம் 90 இலட்சம் ரூபா செலவில் பூரணப்படுத்தப்பட்டு 64 கணணிகளும் ஏனைய உபகரணங்களும் அடங்கலாக மாணவர்கள் பயன்பெறும் வகையில் பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.

5-PMMA CADER-14-10-2015_Fotor

அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எடுத்த மற்றுமொரு முயற்ச்சியாக மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலையில் 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி வகுப்பறைக் கட்டத்திற்கான அடிக்கல் அவரினாலேயே நடப்பட்டது. இக்கட்டம் 40 இலட்சம் ரூபா செலவில் இப்போது பூரணப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

 

ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்,,விஷேட அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்,ஏ.ஆர்.எம்.அமீர்,ஏ.எல்.எம்.முஸ்தபா,எம்.எஸ்.உமர் அலி பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.யாஸிர் அறபாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

8-PMMA CADER-14-10-2015_Fotor

மேலும் பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள்,பாடசாலை நலன்விரும்பிகள்,பெற்றோர்கள் மாணவர்கள் பொது மக்கள் என பெரும் தொகையானோர் கலந்து கொண்டனர்.