‘பயங்கர அமைதியில் தலைவரின் அறிவிப்பை காத்து நிற்கும் அட்டாளைச்சேனைப் பிரதேசம்’ : பழில் BA !

பழில் BA – slmohamedfaleel@gmail.com

Faleel
பொதுத்தேர்தல் முடிந்து 2 மாதங்கள் கடந்து 3 வது மாதத்தை நோக்கி சி.ல.மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. தலைவரின் அறிவிப்பில் இன்னும் தாமதமேன்?…..மூன்றையும் வென்றுகொடுத்து சாதனை படைத்த அட்டாளைச்சேனைப் பிரதேசமக்கள் அவசரமாய் ஆவலாய் ஆக்ரோஷமாய்,குதூகலத்துடன் அறிவிப்பை எதிர்பார்த்து அலுத்துப்போய் இன்று ஏமாந்து நிற்கின்றனர். ஏமாற்றத்துடன் அங்கலாய்த்து, வார்த்தையற்று, 30வருடமாய் தொடரும் எதிரிகளின் மரியாதையற்ற நையாண்டி கிண்டல்களை கேட்டும் கேட்காதவர்களாக வெட்கித்து ஓரம்போகின்றனர். உச்சப் பொறுமைகளுடன் செய்வதறியாது நடைப்பிணங்களாய் பரிதவித்துநின்று குழுக்களாய் குசுகுசுக்கும் காட்சிகளை இன்று எங்கும் காணமுடிகின்றது.

 
ஆனால் கட்சியின் மூத்தபோராளிகள் தலைமையை நன்கு புரிந்தவர்கள், அசையாத நம்பிக்கையுடன் ஆறுதல் வார்த்தைகளைக்கூறி விரக்தியிலிருந்தும் அவர்களை சற்று விடுவித்து தெம்பூட்டும் செயற்பாடுகள் நிறையவே நடந்துவருகின்றன.
15வருடகாலமாக இக்கட்சியை, சமுதாய அமானிதத்தை விலைபோகாது பாதுகாத்துவரும் தேசியத்தலைவன். இந்நாட்டு முஸ்லிம்களின்; அறுதிப்பெரும்பாண்மை வாக்குகளை வென்றெடுத்த ஒரேயொரு கட்சியின் தலைவன். பொறுமையாய்,பக்குவமாய்,நிதானத்துடன் தேசியப் பிரச்சினைகளில் காய்நகர்த்தல்களைச் செய்து இனநல்லிணக்கங்களைப்பேணி நம்மினத்தை பாதுகாத்துவரும் சமுதாயக்காவலன்.

 

பல்மொழி,பல்லின, பல்மதங்கள் வாழும் இந்நாட்டில் எப்பொழுதும் இனஜக்கியத்தைப்பேணி எமது உரிமைகளையும் பவ்வியமாக வென்றெடுக்க வேண்டுமென்ற பக்குவமும் ஞானமும் மனிதநேயமும் கொண்ட சாணக்கிய அரசியல் தலைமை.நிதானமாக வகுத்த வியூகங்களினால் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரை பெற்றெடுத்து வரலாறு படைத்த வக்கிரத் தலைமைத்துவம்.
இத்தகைய நிதானமான பண்பான தூரதிருஷ்டியான தலைமைத்துவம் தான் அட்டாளைச்சேனைக்கு 30வருடங்களின் பிற்பாடு தேசியப்பட்டியல் வாக்குறுதியை இம்முறை வழங்கியது. அதன் சொல் நாணயத்தையும், அதனைப் பேணவேண்டிய பொறுப்பு, தாத்பரியங்களைப் புரியாத அறியாத தலைமையல்ல அது.

 

ஆகவே தலைமைத்துவம் கிழக்கிலும், மேற்கிலும்,வடக்கு மேடைகளிலும் பரவலாக தீர்க்கமான முடிவுகளோடுதான் அதை மீண்டும் மீண்டும் இன்றுவரையும் கூறிவருகின்றது. ஆணித்தரமாக அட்டாளைச்சேனைக்கு வழங்கிய வாக்குறுதியை இம்முறை நிறைவேற்றியே ஆகும் என்ற என்ற திடமான நம்பிக்கை கட்சிகாரர் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டியது அடிப்படைப் பண்பாகும். இந்த நம்பிக்கையில் சலனப்படுவதோ, சந்தேகிப்பதோ நமது தமைத்துவத்தின் தகுதி, தராதரப்பண்புகளை நாமே குறைத்து மதிப்பிடும் இக்கட்டான நிலையை நம்மிடையே ஏற்படுத்தும்.
ஆனால் மக்களைக் குழப்பிவிட்டு குட்டையில் அம்பிடுவதை கைப்பற்றும் துரோகத்தனம் தொடர்கின்றது. ஊரைக்காட்டிக் கொடுக்கும் இத்துரோகத்தனம் இன்று நேற்றல்ல, னுசு. ஜலால்டீன் காலத்திலிருந்து கச்சிதமாக நடந்து வருகின்றது.
வருகின்ற அதிகாரங்களை கையில் போட்டுக்கொண்டு பிழைப்பு நடத்தும் இக்கைங்கரியம் கடந்த 40வருடங்களாக அரங்கேறுகின்றது. தான் பிறந்த தாய்மண்ணுக்கு ‘MP தேவையில்லை’ என்ற நஞ்சூட்டும் இத்துரோகத்தனம் இன்னும் எம்மக்களுக்கு புரியவில்லை.

 

சி.ல.மு.காங்கிரசின் தேசியத் தலைவர் இம்முறையாவது அட்டாளைச்சேனைக்குரிய 30வருட கடனை, தனதுவாக்கினை எப்படியாவது வழங்கவேண்டுமென ‘எந்த கொம்பன் எதிர்த்தாலும் பரவாயில்லை’ என்று வரிந்து கட்டி நிற்கின்றார். ‘ஆனால் நான் கொடுக்க விடமாட்டேன்’ என சவாலுடன் மறுபுறத்தில் ‘நஞ்சுகலந்த விஷத்துரோகி மாஷ்டர்’. அவரின் மகுடிக்கு முன்னால் ஆழம்தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கும் மாகாணமும், புதிதாக கட்சி லேபல் பெற்ற மற்றவர்களும்.

 

தலைவருக்கும், ஊருக்கும் குறுக்கேநின்று தடுத்துக்கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் தேசியப்பட்டியல் ஊருக்குத் தேவையில்லை என்றனர். தலைவர் ஆணித்தரமான வாக்குறுதியை பகிரங்கமாக வழங்கியபின்பு,

 

 இப்பொழுது மாகாண சுகாதார அமைச்சு போதும் MP யை எந்த ஊருக்காவது கொடுங்கள்….. என தலைவரிடம் ஏறி இறங்குகின்றார்கள்.
இப்புனித அட்டாளை மண்ணின் மைந்தர்களே! இது இம்மண்ணில் பிறந்த பகுத்தறிவுள்ள ஒருவன் செய்யும் காரியமா?…..ஒரு ‘விஷமாஷ்டரின்’ கோடினேற்றர் பதவிக்காக முழுஊரும், எமது மக்களும் எதிர்கால சந்ததிகளும்கூட அரசியல் அடிமைகளாக தொடர்ந்தும் இருக்கவேண்டுமென நினைக்கும் எட்டப்பனை இம்மண் எவ்வாறு மன்னிக்கும்?…….
30வருடமாக பொறுமை காக்கும் நன்நோக்குள்ள அட்டாளை மக்களே! சிந்தயுங்கள்…..

 

இவ்வாறான துரோகத்தனங்களும், காட்டிக்கொடுப்புகளும், எமது ஒற்றுமையின்மையும் தான் 1980களில் கிடைத்த ஜலால்தீன் MP யைக்கூட பறிகொடுக்கவேண்டிய அபாக்கிய நிலைக்கு எம்மைத்தள்ளி விட்டது. அட்டாளையின் அரசியல் அடிமைத்தனம் இன்னும் தொடரத்தான் வேண்டுமா?
தேசியத்தலைவனோடு ஊர்சேர்ந்து வாக்களிக்கப்பட்ட எமக்குரிய MP யைப் பெறுவதா? மாறாக தலைவருக்கு சவால்விட்டு ஊரைக் காட்டிக் கொடுக்கும் விஷமாஸ்டரோடு சேர்ந்து எமது மண்ணையும்,எம் எதிர்கால சந்ததியையும் பாதுகாப்பதா?………. எதுவேண்டும்! சிந்திப்போம்! செயற்படுவோம் இன்ஷா அல்லாஹ், இறைவன் துணைபுரிவான்!

 

 

0 0 votes
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
alavakkarai
alavakkarai
8 years ago

முன் பின் முரண்பாடுகள் கணக்க இருக்குதே இந்தக் கட்டுரையில். தலைவனையே வக்கிரக்காரன் என்று சொல்றார் BA . எம்பியை அட்டாளைச் சேனைக்கு தருவதாகத் தலைவர் அதிகமான கட்சிக்காரர்களிடம் சொல்லியும் இருக்கிறார். இங்கு அநாகரிகமாக பழீல் BA அவர்களால் விமர்சிக்கப்பட்டுள்ள வாஹிட் மாஸ்டர் மற்றும் தலைவரை அண்மையில் சந்தித்த அட்டாளைச்சேனைப் பிரமுகர்களிடமும் சொல்லித்தானே இருக்கிறார். மார்க்க பற்றுள்ளவராய் தன்னைக் காட்டும் BA எப்படி இவ்வாறு அசிங்கமான வார்த்தைகளால் அறிக்கைவிடுகிறார். அவமாநம்.