ஞானசார தேரர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட எத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார். 

புனித குரானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் ஜாதிக பல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் அத்துமீறி நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது. 

அது குறித்த வழக்கு விசாரணைகளுக்காக நேற்றையதினம் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நிலையில் இவர்கள் இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜராகியுள்ளனர். 

இவர்கள் சரணடைந்ததை அடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளபெறப்பட்டுள்ளது