அஸ்ரப் ஏ சமத்
மர்ஹூம் அஷ்ரப் இரக்க சிந்தனை க்கு நான் நேரில் கண்ட மூன்று உதாரணங்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த மக்கள் சந்திப்பு அமைச்சில் புதன்கிழமையன்று நடைபெறும் மற்ற எல்லா நாட்களிலும் சென்ட்மோர் கிறேசென்ட் வீட்டிலேயே நடைபெறும். அப்பாயின்மென்ட் பெற்று அவரை எவரும் சந்திக்கலாம். சிலவேளைகளில் நள்ளிரவு வரை நடைபெறும். அவருக்குதேவயான அதிகாரிகளை அங்கு வரச்சொல்லியிருப்பார்.
இப்படியானமக்கள் சந்திப்பில் காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் தான் தனது வீட்டை பினையாகவைத்து ரூபா ஐந்து இலட்சம் வங்கியில் கடன் பெற்றதாகவும் அதை கட்டமுடியாமல் போனதால் வங்கி அந்தவீட்டை விற்பனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தானும்தனது ஐந்து பிள்ளைகளும் வீத்யில் நிற்க வேண்டி உள்ளதாகவும் முறையிட்டார் .
அவரிடம் வங்கிக் கடிதமும் இருந்தது .இதற்கு புனர்வாழ்வு அமைச்சு ஒன்றும் செய்ய முடியாது என்று அவருக்கு உணர்த்திய அஷ்ரப் அவர்கள்
அவரை வெறும்கையுடன் அனுப்ப விரும்பவில்லை. உடனே காலம் சென்ற பாராளுமன்ற உறுப்பிணா் அசித பெரேரவை கூப்பிட்டு ரூபா ஐந்து இலட்சம் தன் சார்பாக கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார். உடன் பணமும் கொடுக்கப்பட்டது.நன்றியுடன் அவர்சென்றார்.
இன்னும் ஒா் உதாரணத்தை கூறுகிறேன்
கொழும்பு முஸ்லிம் பெண்கள் கல்லுரி அதிபர் ஜுரம்பதி தனது கல்லூரிக்கு ஒரு கொம்பியுட்டர் யூனிட் ஒன்று போட்டுத்தரும்படி அமைச்சரிடம் கேட்டார்.கொழும்பில் உள்ள கல்லுரிக்கு புனர்வாழ்வு அமைச்சினால் எதுவும் செய்யமுடியாது. அவர்கள் வடகிழக்கு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல எனினும் அமைச்சர் அவருக்கு தேவயான உதவியை செயும்படி என்னை பணித்தார்.
நான்அவர்களது பாடசாலைக்கு சென்றேன். ஆய்வுசெய்த போது
அங்குள்ள பதிவேட்டில் வட- கிழக்கைச் சேர்ந்த மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு படிப்பதை உறுதிப்படுத்தி அதிபரிடம் ஒரு கடிதம் வாங்கிகொண்டேன்.
உடனே அதற்குரிய பத்திரங்களை தயார்செய்து அமைச்சின் செயலாளர் அனுமதியுடன் ஒரு கொம்பியூட்டர் யூனிட் ஒன்றைப் போட்டுக் கொடுத்தோம். அமைச்சரே அதனை அங்கு வந்து திறந்து வைத்தார்.
இன்னுமொரு உதாரணத்தை கூறுகிறேன்
சாய்ந்தமருதூரில் இங்கிலீஸ் ஒடாவி என்றொருவர் மக்கள் சந்திப்பில் அமைச்சரை சந்தித்து நீங்கள் எல்லோருக்கும் புனர்வாழ்வு நிதி கொடுக்கிறீர்கள்
நான் உங்கள் கட்ச்சிக்காக பாடுபட்டவன் எனக்கும் ஏதாவது
தரவேண்டும் வயதாகியதால் ஓடாவி வேலை செய்யமுடியவில்லை என்றார். நீங்கள் யுத்தம் காரணமாக எதையாவது lஇழந்தீர்களா ? என்றுகேட்டார் அதற்கு அவர் தன்னுடைய மாடுகள் பொலன்னறுவையில் காணாமல்போன
தாகக் கூறினார். சட்டப்படி அசையும் சொத்திழப்புக்கு நஷ்டஈடு வழங்கமுடியாது. என புனர்வாழ்வு அதிகாரசபையின் தலைவர்
கூறினார்.அமைச்சரஅவரை நிராகரிக்கவில்லை எதாவது வழிகண்டு உதவுங்கள் என்றுஎன்னை அமைச்சர் பணித்தார். நான் அவரை பொலநருவைக்குச் சென்று கிராமசேவகர் உறுதிபடுத்தி அதனை பிரதேச செயாளர் சான்றுடன் வருமாறுகூறினேன். அவாறே செய்துள்ளார். அமைச்சர் இதனை ஒரு விசேட கேஸ் என்று ஜனாதியின் ஒப்புதலுடன் அவருக்கு நிதிவழங்கப்பட்டது. இவ்வாறு அவரை சந்தித்த விடயங்கள் உண்மை எனக் கண்டால் அஷ்ரப் மூளையை விட இதயத்தால் முடிவு எடுக்கும் ஒருமாமனிதர். இவைஎல்லாம் உண்மைச் சம்பவங்கள்.
தகவல் எம்.எச். ஏ சமத்
மர்ஹூம் அஸ்ரபின் அமைச்சின் ஆலோசகராக பணியாற்றியவா்.