கொழும்பிலுள்ள சில பாதைகளில் நாளை முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் கடைபிடிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இன்று காலை 7.30 மணிமுதல் 8.45 வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் நாளை காலை 7.30 முதல் 8.45 வரை இந்த விசேடப் போக்குவரத்து ஒழுங்கு இடம்பெறும் எனவும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
வெலிக்கடை சந்தியிலிருந்து ஆயுர்வேத சந்தி வரையிலும் மற்றும் தேவிபாலிகா வித்தியாலயத்திலத்திற்கு அருகிலிருந்து தாமரைத் தடாக அரங்க வரையான வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு நகரில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலை கட்டுப்படுத்தவே இந்த போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


