மஸ்ஜித் நிருவாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு!

 

 
பழுலுல்லாஹ் பர்ஹான்
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் மஸ்ஜித் நிருவாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று 10 சனிக்கிழமை மாலை தொடக்கம் இரவு வரை காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
 
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் பலாஹி தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்பூட்டல் கருத்தரங்கில் உலமாக்கள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள்,காத்தான்குடி மற்றும் அதனை அண்டியுள்ள முஸ்லிம் கிராமங்களிலுள்ள பள்ளிவாயல்களின் நிருவாகிகள் ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இங்கு மஸ்ஜிதை பராமரிப்பதன் சிறப்புக்கள் எனும் தலைப்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின்; செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.ஜி.எம்.ஜெலீல் சிறப்புரை நிகழ்த்தியதுடன், மஸ்ஜித் நிருவாகிகள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளும் அவர்களின் சமூக,மார்க்கப் பொறுப்புக்களும் எனும் தலைப்பில் மருதமுனை தாருல் ஹூதா அறபுக் கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எம்.எம்.முபாறக் மதனி விஷேட உரை நிகழ்த்தினார்.
 
இக் கருத்தரங்கின் தொகுப்புரையை காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) வழங்கினார்.
 
குறித்த மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தஃவத் -இஸ்லாமிய பணிகளின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
9-DSC_0217_Fotor 7-DSC_0175_Fotor 6-DSC_0178_Fotor