எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துரோகம் இழைக்க தயாரில்லை : இராணுவத் தளபதி !

பயங்கரவாத்திலிருந்து மீட்டெடுத்த நாட்டுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துரோகம் இழைக்க தயாரில்லை என்று இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 

பனாகொடை இராணுவ முகாமில்  இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் 66வது நினைவு தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

army1.bmp
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கி நாட்டை பாதுகாப்பது, பாதுகாப்பு தரப்பினரின் பொறுப்பாகும் என்று அவர் தெரிவித்தார். மனிதாபிமான செயற்பாடுகள், ஒழுக்கம், நேர்மை, தொழில்முறை போன்ற காரணங்கள் சம்பந்தமாக இலங்கை இராணுவத்திற்கு உலகப் புகழ் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

அத்துடன் இலங்கை அடைந்த யுத்த வெற்றியானது உலகிற்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.