அஸ்ரப் ஏ சமத்
தெஹிவளை மிருகட்காட்சி சாலைக்கு அருகில் உள்ள எஸ்.டி.எஸ். ஜயசிங்க விளையாட்டு மைதானத்தினை தெஹிவளை மாநகர சபை இரானுவத்தின் பொறியியல் பிரிவினால் நவீனமயப்படுத்தப்பட்டு இன்று (10.10.15) திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு தெஹிவளை மாநகர முதல்வா் தனசிரி அமரதுங்க தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மேல்மாகாண முதலமைச்சா் இசுரு தேவப்பிரிய பாதுகாப்பு அமை்சின் செயலாளா் கருணசேன ஹெட்டியராச்சி ஆகியோா் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இம் மைதானத்தை திறந்து வைத்தாா்கள்.
இங்கு உரையாற்றிய மேல்மாகணத்தின் புதிய முதலமைச்சா் இசுரு தேவப்பிரிய தெரிவித்தாவது –
நான் கடந்த இரண்டு முறை மகரகமவின் நகரசபைத்தலைவராக பதவி வகித்து அதன் பின் 16 வருடம் மேல்மாகணத்தின் உறு்பினராக இருந்தேன்.
நான் எப்போதும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவராக வருபவருக்கு கட்டுப்பட்டு செயலாற்றினேன்,
ஆனால் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் என் போன்றோா்களை ஒரு மூலையில் வைத்திருந்தாா்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவா்கள் ஒரு சாதராண குடும்பத்தில் பிறந்த என்னை ஒரு முதலமைச்சராக ஆக்கினாா். நான் எப்பொழுதும் மக்களோடு இருப்பவன். நான், எவ்வித களவுகள் கபடம் செய்யாத ஏழையான எனக்கு இந்த முதலமைச்சா் பதவி கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிர்சேன அவா்கள் மேல்மாகாணத்தில் உள்ள சகல உள்ளுராட்சிகளையும் தம்மிடம் கையளித்துள்ளாா். எதிா்வரும் மாா்சில் நடைபெறும் தோ்தலில் மேல்மாகாணத்தில் உள்ள சகல சபைகளும் ஸ்ரீ.ல.சு.கட்சி வென்றெடுக்க நான் பாடுபடுவேன் அதே போன்று தெஹிவளை மேயா் தனசிரி அமரதுங்க எனது 25 வருட கால நண்பன் அவா் மீண்டும் இந்த மாநகர சபைக்கு மேயராக வருவதற்கு நான்பாடுபடுவேன் .
அடுத்த கிழமை தெஹிவளை மாநகர சபை கலைக்கப்பட உள்ளது எனவும் இங்கு உரையாற்றினாா்.