இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தி விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, ஜனாதிபதி தெரிவித்ததாவது;
கடந்த பல தசாப்தங்களாகவே நாட்டில் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. கைகால்கள் இல்லாது போனது. காணாமற்போனார்கள். புதிய அரசாங்கம் என்ற வகையில் நாம் நாட்டில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். வௌ்ளை வேன் கடத்தல், அச்சுறுத்தல், தொலைபேசியூடாக தலைப்பு செய்திகளை மாற்றுமாறு உத்தரவிடுதல் போன்றவற்றைக் கடந்த காலங்களில் நாங்கள் கண்டோம். அமைச்சர்களுக்கு எதிராக எழுதும்போது அரசியல் தலைமைத்துவம் எவ்வாறு தொலைபேசியில் அழைத்தது என்பது எமக்கு தெரியும். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் எமது நாடு தொடர்பில் தீரமானம் எடுத்த சந்தர்ப்பத்தில் அதனைத் திசை திருப்ப முயன்றனர். ஆனால் ஊடகவியலாளர்கள் மிகவும் புத்திசாதுர்யமாக செயற்பட்டனர்.
இந்த வைபவத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் 10 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
சிரேஷ்ட சித்திரக் கலைஞரான திலக் கலுலியனகே இந்தத் தருணத்தில் வரைந்த ஓவியமொன்றும் ஜனாதிபதிக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.