சுகாதார அமைச்சருடன் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் விஜயம்!

அபு அலா 

 

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் தலைமையிலான உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் நாளை மறுதினம் (10) விஜயம் செய்யவுள்ளதாக பிரதி அமைச்சரின் சுதேச மருத்துவ அபிவிருத்தி திட்டத்தின் விஷேட ஆலோசகரும் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

nakfar

 

திருகோணமலை மாவட்டத்துக்கான விஜயத்தினை எதிர்வரும் (10) சனிக்கிழமையும், அம்பாறை மாவட்டத்துக்கான விஜயத்தினை (11) ஞாயிற்றுக்கிழமையும் மேற்கொண்டு வைத்தியசாலைகளில் நிலவும் ஆளனி மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகள் பற்றியும், வைத்தியசாலைகளுக்கு மிக அவசரமாக தேவைப்படும் உபகரணங்களின் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த விஜயம் அமையவுள்ளது.

 

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள கரையோர வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்யும் இக்குழுவினருடன் சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபாலவும் வருகை தரவுள்ளதாவும், எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்திலுள்ள கரையோர வைத்தியசாலைகளில் சுகாதார சேவைகளை மேன்படுத்தி பொதுமக்களுக்கு இச்சேவையை சிறந்த சேவையாக மாற்றியமைக்கும் நோக்குடனேயே இந்த விஜயம் அமையப்பெறவுள்ளதாகவும் பிரதி அமைச்சரின் சுதேச மருத்துவ அபிவிருத்தி திட்டத்தின் விஷேட ஆலோசகரும் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.