இனி மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள் அனுமதிக்கப்படமாட்டாது !

indiasouthafricapti

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. இந்தப் போட்டியின் போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விளையாடிய இந்திய அணி 92 ரன்னில் சுருண்டதால் ரசிகர்கள் ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்த போது ரசிகர்கள் மீண்டும் கலாட்டாவில் ஈடுபட்டனர். 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன் எடுத்து இருந்தபோது ரசிகர்கள் மிகவும் ஆக்ரோஷத்துடன் தண்ணீர் பாட்டில்களை வீசினார்கள். ரகளையில் ஈடுபட்ட பெரும்பாலான ரசிகர்களை வெளியே அகற்றிவிட்டு 45 நிமிடத்துக்கு பிறகு போட்டி நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கும்படி முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். 

india-vs-south-africa-t-20_b1ef926e-6b83-11e5-8600-ad8872d9e6cf

இந்நிலையில் வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒடிசா மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் ஆசிர்வாத் பேகரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது “ இந்திய கிரிக்கெட் வாரியத்திடம், இது போன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாது என்று தெரிவிக்கவுள்ளோம். இனி மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள் அனுமதிக்கமாட்டோம். மேலும், ஐ.சி.சி.-யின் விதிமுறைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.