இங்கிலாந்து நாட்டின் வால்வர்ஹாம்டன் நகரில் ஓட்டல் நடத்தி வந்தவர் இங்கிலாந்து வாழ் இந்தியர் ரஞ்சித் சிங். இந்தியா வந்த இவர் மே 8-ந்தேதி இங்கிலாந்து செல்ல அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு புறப்பட்டார்.
ஆனால் அதன் பிறகு திடீரென மாயமானார். அவருடைய உடல் ஜூன் மாதம் அங்குள்ள ஒரு ஏரியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இறந்தவர் ரஞ்சித் சிங் தான் என அவருடைய நண்பர் தர்சன் சிங் உறுதிபடுத்தினார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ரஞ்சித் சிங்கை ஆட்டோ டிரைவர் ஒருவர் அடித்துக் கொன்று ஏரியில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து ரஞ்சித் சிங்கின் உடலை பிரேத பரிசோதனை நடத்தி இங்கிலாந்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இந்திய போலீசார் அனுப்பிய உடல் தன்னுடைய தந்தையின் உடல் இல்லை என ரஞ்சித் சிங்கின் மகள் எம்மா குற்றம்சாட்டினார். இது குறித்து அவர் மேலும் கூறும் போது, டி.என்.ஏ. சோதனையில் இறந்தவரின் உடல் எங்களுடைய குடும்பத்தினருடன் ஒத்துப்போகவில்லை. போலீசார் முறையாக சோதனை நடத்தி எங்கள் தந்தையின் உடலை அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.