பொது மக்களின் பிரச்சனைகளை முன்னெடுத்து, அது தொடர்பாக வீதிகளில் இறங்கி போராடி ஆட்சிக்கு வந்த கட்சி ஆம் ஆத்மி.
இந்நிலையில் டெல்லி சட்டபேரவை உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு தன்னுடைய அறிக்கையை சமர்பித்துள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகளை கெஜிரிவால் அரசு ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், டெல்லி எம்.எல்.ஏ.-களின் சம்பளம் 50 ஆயிரமாக அதிகரிக்கும். மேலும் சட்டபேரவை நடைபெறும் போது கொடுக்கப்படும் அலவன்ஸ் தொகை 2 ஆயிரமாக அதிகரிக்கும். அவர்களின் தொகுதி அலவன்ஸ் ரூ.50,000 மற்றும் அலுவலக அலவன்ஸ் ரூ.95,000 ஆக அதிகரிக்கும்படி முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போது அவர்களின் சம்பளம் 12 ஆயிரமாக உள்ளது. நாட்டிலேயே அசாம் எம்.எல்.ஏ.-கள் தான் அதிகபட்சமாக 60 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள். குறைந்தபட்சமாக கேரள எம்.எல்.ஏ.-கள் 1000 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள்.
டெல்லியின் 70 சட்டபேரவை உறுப்பினர்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 67 உறுப்பினர்கள் உள்ளனர்.